மீந்து போன 1 கப் சாதம் இருந்தா போதும் சாஃப்ட்டான சப்பாத்தி ரெடி! சாதத்தில் சப்பாத்தியான்னு யோசிக்காதீங்க.

rice-chappathi
- Advertisement -

சாதம் மீந்து போனால் அதை என்ன செய்வது? என்று நிறைய யோசித்துக் கொண்டிருப்பீர்கள். மீதமான சாதத்தை வைத்து சுவையான சப்பாத்தி செய்ய முடிந்தால் அதை ஏன் வீணாக்க வேண்டும்? ஒரு கப் அளவிற்கு சாதம் இருந்தாலும் இப்படி சுவையான, சாஃப்ட்டான சப்பாத்தி ஈசியாக செய்யலாம்! காலை நேரத்தில் மட மடவென இந்த சப்பாத்தியை செய்து அசத்தி விடலாம். சுவையாய் சாத சப்பாத்தி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மீந்து போன சாதம் ஒரு கப் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் இந்த சாதத்தை சேர்த்து அதனுடன் கால் கப் அளவிற்கு மைதா மாவு மற்றும் கால் கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். மைதா மாவிற்கு பதிலாக கோதுமை மாவு மட்டுமே சேர்க்கலாம். பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த விழுதில் சாதம் சேர்த்திருப்பதால் கைகளில் ஒட்டும் அளவிற்கு இருக்கும். இப்போது இதனுடன் தேவையான அளவிற்கு கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கைகளில் ஒட்டாத அளவிற்கு பிசைய வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளுங்கள். கை விரல்களை மடக்கி பின்புறமாக நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து கொடுங்கள்.

கோதுமை மாவை பிசையும் பொழுது எவ்வளவு சாப்டாக இருக்குமோ, அதே போல நல்ல மிருதுவாக மாவு கைகளில் ஒட்டாதபடி வந்த பிறகு மீண்டும் ஒருமுறை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு மாவை தேய்த்து சப்பாத்திக்கு தட்டுவது போல சப்பாத்தியை தேய்க்க வேண்டும். வட்டமாக சப்பாத்தியை தேய்த்து பின்னர் சுட்டு எடுத்தால் சூப்பரான சப்பாத்தி சுடச்சுட ரெடியாகிவிடும்.

- Advertisement -

மீந்து போன சாதத்தை வைத்து வாடாம் தயாரிப்பது மட்டுமல்ல, இது போல சுவையான சப்பாத்தியையும் நாம் தயாரிக்கலாம். பொதுவாக சாதத்தை வீணடிக்க கூடாது என்று கூறுவார்கள். சாதத்தைக் கொண்டு இது போல நிறைய ரெசிபிக்கள் நாம் தயாரிக்க முடியும். மீந்து போன சாதத்தை இதே போல மிக்ஸியில் அடித்து வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, சீரகம், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வடை பதத்திற்கு தட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு சூடாக இருக்கும் எண்ணெய் சட்டியில் வடைகளாக பொறித்து எடுத்தால் சுவையான சாத வடை தயார். உள்ளே சாப்டாகவும், வெளியே மொறுமொறுவென்று சூப்பராக இருக்க கொஞ்சம் அரிசி மாவு இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது போல சாதம் மீந்து போனால் இனி தூக்கி போடாமல் ஏதாவது ஒரு சுலபமான ரெசிபிகளை செய்து அசத்தலாம். இது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும். மேலும் மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் அந்த தண்ணீரை மட்டும் தினமும் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணியும், இதனால் உடல் சூடாவது தடுக்கப்படும்.

- Advertisement -