- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamil10 பைசா செலவில்லாமல் சருமம் பளபளக்க

10 பைசா செலவில்லாமல் சருமம் பளபளக்க

- Advertisement -

சரும ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் இந்த இரண்டையும் கவனித்தால் உலகமே நம் வசமாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்க இந்த இரண்டும் நம் கண்களைப் போல பாதுகாக்க வேண்டும். பல்லாயிரம் ரூபாய் செய்து தான் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது இல்லை. பத்து பைசா கூட செலவு செய்யாமல் தினமும் இந்த தண்ணீரை பயன்படுத்தினால் போதும், முகம் 10 நாளில் பளபளன்னு மாறும். அது என்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

சரும ஆரோக்கியத்திற்கு அந்த காலத்தில் எல்லாம் மஞ்சளை தான் பயன்படுத்தினார்கள். பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்தாலே சரும நோய்கள் அண்டாது. முகச் சுருக்கமும் அவ்வளவு எளிதாக வருவது கிடையாது. ஆனால் மஞ்சள் அசௌகரியமாக இருக்கும் என்பதால் இந்த காலத்து பெண்கள் அதை பயன்படுத்துவது கிடையாது. உடைகளில் மஞ்சள் பட்டு விடும், பார்ப்பதற்கு வயதான தோற்றம் போல தோன்றும் என்றெல்லாம் தவறாக எண்ணுகின்றனர்.

- Advertisement -

சரி, மஞ்சளை பயன்படுத்தாதவர்கள் இந்த தண்ணீரை பயன்படுத்திப் பாருங்கள், அதற்கு இணையான பலன்களை பெற்று விடலாம். தினமும் சாதம் செய்வது நம்முடைய வழக்கம். சாதம் செய்யும் பொழுது அரிசியை கழுவிய தண்ணீரை கூட வீணாகாமல் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றோம். அதே போல அரிசியை வடிக்கும் தண்ணீரும் மிகவும் முக்கியமானது.

அரிசி வடித்த கஞ்சி தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு அப்படியே குடித்து விடுவார்கள், நம் முன்னோர்கள். இது உடலுக்கு அவ்வளவு எனர்ஜியை கொடுக்கும். அரிசியில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும், கஞ்சி தண்ணீரிலும் கிடைக்கும் என்பதால் அதை வீணாக்குவது கிடையாது. இப்பொழுது எல்லாம் கஞ்சி தண்ணீரை கீழே கொட்டி விடுகிறோம். இந்த கஞ்சி தண்ணீரை குடிக்காவிட்டாலும் பரவாயில்லை, முகம் மற்றும் தலைக்கு பயன்படுத்தினால் அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.

- Advertisement -

தினமும் அரிசி வடிக்கும் கஞ்சி தண்ணீரை சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நான்கு மணி நேரம் அப்படியே ஆற விட்டு விடுங்கள். நன்கு புளித்து கெட்டியான தன்மையுடன் இருக்கும். இந்த சமயத்தில் கஞ்சி தண்ணீருடன் கொஞ்சம் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதி வரை அப்ளை செய்து கொள்ளுங்கள். ஒரு அரை மணி நேரம் அப்படியே காயவிடுங்கள். பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்பி முகத்தை மென்மையாக காட்டன் துணியால் தொட்டு மிருதுவாக துடைத்துக் கொள்ள வேண்டும். இது போல ஒரு பத்து நாள் மட்டும் செய்து பாருங்கள், உங்கள் முகத்தில் அவ்வளவு பளபளப்பு இருக்கும். முகத்தில் இருக்கும் கருமை முற்றிலும் மறைந்து, சருமம் ஈர பதத்துடன் மிருதுவாகவும், நல்ல நிறத்துடனும் பளிச்சென்று மின்னும்.

இதையும் படிக்கலாமே:
பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும் விநாயகர் சதுர்த்தி பரிகாரம்.

தினமும் இந்த கஞ்சி தண்ணீரை இது போல பயன்படுத்தலாம். சிலருக்கு முகத்தில் ஒரு இடம் ஒரு நிற த்திலும், இன்னொரு இடம் வேறு ஒரு நிறத்திலும் அசிங்கமாக தெரியும். சிலருக்கு நெற்றி பகுதி, மூக்கு பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது போல இருப்பவர்கள் கூட இதனை முயற்சி செய்தால் கொஞ்ச நாட்களிலேயே நல்ல பலனை நீங்கள் கண்டுவிடலாம். கஞ்சி தண்ணீரை தலைக்கு கண்டிஷனர் போல் பயன்படுத்தலாம். குளித்து முடித்த பின்பு கஞ்சி தண்ணீரை சிறிது நேரம் ஊற வைத்து தலையை அலசினால் தலை முடிக்கு நல்ல சத்து கிடைக்கும். கஞ்சி தண்ணீர் மட்டும் அல்லாமல் தலைக்கு, அரிசி வடித்த தண்ணீரையும் தடவி ஊற வைத்து பின் தலைக்கு குளிக்க முடி உதிர்வது முற்றிலும் தடுக்கப்படும்.

சற்று முன்