வாடகை கட்டியது போதும், சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்று ஆசையா? நிலத்தை விற்கவோ, வாங்கவோ பிரச்சனைகள் இருக்கிறதா? சொத்து பிரச்சனை, வாஸ்து பிரச்சனை, நிலம், தோட்டம், ரியல் எஸ்டேட், வேளாண்மை, பாகப்பிரிவினை, வீடு என்ற பூமி சார்ந்த எல்லா பிரச்சனைகளும் தீர, பூமி வரம் தரும் பூமிநாத சுவாமியை வழிபடுவது எப்படி? இக்கோவில் அமைந்திருக்கும் இடம் மற்றும் செய்யக்கூடிய பரிகாரங்கள் பற்றிய தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
ஒருவருக்கு சொந்தமாக பூமி இருந்தாலும் பிரச்சனை, இல்லாவிட்டாலும் பிரச்சனை என்பது போல தான் இன்றைய நிலைமை இருக்கிறது. எப்படிப்பட்ட பூமி சார்ந்த பிரச்சனைகளையும், பூமிக்கு உரிய நாயகனாக விளங்கும் பூமிநாத சுவாமி தீர்த்து வைத்து விடுகிறார். சுமார் 2000 வருடங்கள் பழமையான இந்த சக்தி வாய்ந்த திருக்கோவில் திருச்சியில் மணச்சநல்லூர் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. சுயம்பு லிங்கமாக காட்சி தரும் பூமிநாத சுவாமி உடன், அறம் வளர்த்த நாயகியாக ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.
மண் + அரக்கநல்லூர் என்பது மருவி மணச்சநல்லூர் என்றாகியது. அகத்தியர் தன் நூலில் 16 விதமான தோஷங்களை இத்திருத்தலம் போக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். நம் அனைவரையும் தாங்கும் பூமாதேவிக்கு இவ்வளவு சக்தியை கொடுத்தது, இந்த பூமிநாத சுவாமிதான் என்றும் வரலாறு கூறுகிறது. இங்கு ராகு மற்றும் கேது பகவான் மனித உருவில் காணப்படுவது மிகவும் அபூர்வமான காட்சியாகும். இங்கு அகத்தியரால் சாபம் பெற்ற இந்திரன் சாப விமோசனம் அடைந்ததாக ஸ்தலபுராணம் கூறுகிறது.
பூமிக்கு நன்மைகளை அள்ளித் தரக்கூடிய வன்னி மற்றும் வில்வம் ஆகிய விருட்சங்கள் இங்கு ஸ்தல விருச்சமாக இருக்கப் பெறுகிறது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், நிலத்தை வாங்கவோ, விற்கவோ வேண்டும் என்று விரும்புபவர்கள், சொத்து பிரச்சனைகள் தீரவும் தங்கள் நிலத்திலிருந்து வடகிழக்கு மூலையில் மண்ணைத் தோண்டி நல்ல நாளில் புதன் ஹோரையில் மூன்று கைப்பிடி அளவிற்கு மண்ணை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும்.
இக்கோவிலில் இருக்கும் கொடி மரப்பிள்ளையாரை முதலில் வணங்கி வழிபட்டு தீபம் போட வேண்டும். பின்னர் அன்னைக்கு தீபம் போட்டு விளக்கேற்றி வழிபட்டு, மூலவரை தரிசித்து விளக்கேற்றி, அவரிடம் கொண்டு வந்த மண்ணை வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் பிரகாரத்தை ஒரு முறை வலம் வந்து, அர்ச்சனை செய்த மண்ணை அங்கு இருக்கும் தல விருட்சமான வில்வ மரத்தின் அடியில் போட வேண்டும். பின்னர் மறுமுறை பிரகாரத்தை வலம் வந்து அதே போல வன்னி மரத்திற்கு அடியில் இருக்கும் மண்ணை மூன்று கைப்பிடி அளவிற்கு எடுத்து அதே மஞ்சள் துணியில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
ஆரோக்கியத்திற்கு மஞ்சள் தானம்
மூன்றாவது முறை பிரகாரத்தை வலம் வந்து, பிரார்த்தனை செய்தால் ஒரு வருடத்திற்க்குள் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். வீட்டிற்கு வந்ததும் மறுநாளில் புதன் ஹோரை பார்த்து, நீங்கள் மண் எடுத்த அதே இடத்தில் கோவிலில் இருந்து புதிதாக கொண்டு வந்துள்ள மண்ணை போட வேண்டும். தூப, தீபம் காண்பித்து அந்த மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை முடிந்து வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். வேண்டிய வேண்டுதல் நிறைவேறியதும், மீண்டும் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, காணிக்கையை கோவில் உண்டியலில் போடுங்கள்.