பலவீனமாக இருக்கும் மனதை கூட,  உறுதியாக மாற்றக்கூடிய சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. உங்கள் தலைவிதியை மாற்றப்போகும் அந்த முத்திரையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

bramma
- Advertisement -

நம்முடைய தலைவிதியை மாற்ற கூடிய சக்தி, நம்முடைய மனதிற்கு தான் உண்டு. தொடர்ந்து வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொண்டு, துணிந்து வாழ்க்கையில், மன உறுதியோடு போராடினால் துன்பங்கள் காணாமல் போகும் என்பதுதான் உண்மை. வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை துணிந்து எதிர்க்க வேண்டுமென்றால், துணிச்சலான மனம் நமக்கு வேண்டும். துணிச்சலான மனதை பெற, நமக்காக சித்தர்கள் ஒரு முத்திரையை சொல்லி வைத்துள்ளார்கள். அது எந்த முத்திரை, அந்த முத்திரையை எப்படி பிரயோகம் செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sad

நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால், நம்முடைய ஆழ்மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்க வேண்டும். ‘நமக்கு துன்பம் வராது. நம் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வோம், என்ற நம்பிக்கையை முழுமையாகக் கொண்டு வர வேண்டும்.’ எப்போதுமே ‘நமக்கு ஏதாவது கஷ்டம் வந்துவிடுமோ! துயரத்தில் மாட்டிக் கொள்வோமோ!’ என்ற பயம் ஆழ்மனதிற்குள் இருந்தால் எதிர்மறையான விளைவுகளைத் தான் நாம் சந்திக்க நேரிடும். பிரச்சினைகளும் நம்மோடு ஒட்டிக் கொள்ளும்.

- Advertisement -

முடிந்தவரை உங்கள் ஆழ் மனதின் நினைவுகளை, எண்ணங்களை நேர்மறையாக வைத்துக்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். அந்த வரிசையில் நம்முடைய மனதில் நேர்மறை எண்ணத்தோடு செய்யக்கூடிய முத்திரை தான் இது. இந்த முத்திரையின் பெயர் ‘பிரம்ம முத்திரை’. நம்மை படைக்கக்கூடிய பிரம்மனின் பெயரைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் இந்த முத்திரையை தொடர்ந்து 48 நாள் நாம் பிரயோகப்படுத்தி வந்தால், நிச்சயம் நம்முடைய தலையெழுத்து மாறும் என்பதும் நம்பிக்கை.

பொதுவாகவே முத்திரைகளை நான் பிரயோக படுத்த வேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்த வேளையில் முத்திரையை பிடிப்பது தான் நல்ல பலனை கொடுக்கும். இந்த பிரம்ம முத்திரையையும் நீங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரயோக படுத்துவதே நல்லது. மற்ற நேரத்திலும் பிரம்ம முத்திரையை பிடிக்கலாம். அதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் அதிகப்படியான பலன்களை விரைவாக அடைய பிரம்ம முகூர்த்த நேரம் சரியானது.

- Advertisement -

முதலில் இரண்டு கைகளையும் சுவாமி கும்பிடுவது போன்ற அஞ்சலி முத்திரையை வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கட்டை விரல்களையும் லேசாக மடக்கி, ஆள்காட்டி விரலின் கீழே இருக்கும் முதல் கோட்டில் தொடும்படி மடக்கி வைக்க வேண்டும். அப்போது உங்களுக்கு கட்டைவிரலுக்கும் மேல் பக்கத்தில் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள். இப்படி செய்வதுதான் பிரம்ம முத்திரை.

bramma-mudra

காலையில் எழுந்து குளித்து விட்டு தான் இந்த முத்திரையை செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. நீங்கள் சுத்தமாக இருக்கும் பட்சத்தில், ஒரு பாயை கீழே விரித்து, கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து இந்த முத்திரையை பிடித்து கொண்டு, அந்த முக்கோண வடிவத்தை உங்கள் கண்களால் பார்த்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கண் இமைக்காமல் அந்த முத்திரையை பார்க்கலாம். கண்களைப் போட்டு வருத்திக் கொள்ளாதீர்கள். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் பார்த்தால் போதும். ஒரு நிமிடம் பார்த்தால் கூட போதுமானது தான். பார்க்கும்போது நேர்மறை எண்ணங்களோடு உங்களது சிந்தனைகளை வைத்துக்கொள்ளவேண்டும்.

bramma

அந்த முக்கோண வடிவத்தைப் பார்த்து நீங்கள் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் எண்ணியபடியே நிறைவேறும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் உங்களது ஆழ்மனதில் எண்ணங்களை தூய்மைப்படுத்திக் கொள்ள, உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை உச்சரித்து அந்த முக்கோண வடிவத்தை உற்று நோக்கலாம். எடுத்துக்காட்டிற்கு வெறும் ‘ஓம்’ அல்லது ‘ஓம் நமச்சிவாயா’ அல்லது ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை கூட மனதார உச்சரித்துக் கொண்டு வெறும் 1 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்தால் கூட போதும். (கண்ணிமைக்காமல் அந்த ஒரு நிமிடமும் பார்ப்பது மிகவும் நல்லது.) வாழ்க்கையில் நீங்கள் நம்ப முடியாத பல மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -