பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு எத்தகைய சக்தி உண்டு தெரியுமா ?

Brahma muhurtham

காலம் என்பது அனைத்தையும் விட பெரியது. அதனால் தான் காலத்தை இறைவன் என்று பலர் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என இந்த உலகம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. இந்த காலம் என்ற விடயத்தையும் ஆன்மிக ரீதியாக அணுகிய நம் முன்னோர்கள் ஒவ்வொரு நேரத்தையும் ஒவ்வொரு செயலுக்கானது என தீர்மானித்தனர். அந்த வகையில் இறைத்தன்மை மிகுந்த நேரமான “பிரம்ம முகூர்த்த” நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

brahma

“பிரம்ம முகூர்த்தம்” நேரம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் நேர கணக்கிற்கேற்ப மாறுபடும். நம் நாட்டை பொறுத்த வரை அதிகாலை “4.30” மணியிலிருந்து “5.15” மணிவரையிலான நேரம் “பிரம்ம முகூர்த்தம் நேரம்” என கணிக்கப்பட்டுள்ளது. பழங்காலம் முதல் இப்போதைய காலம் வரை இந்நேரம் ஒரு ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட நேரமாக கருதப்படுகிறது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் துயிலெழுபவர்களுக்கு உடலாரோக்கியம் மற்றும் வாழ்க்கை நிலை மேம்படும் என நமது சாத்திரங்கள் கூறுகின்றன.

இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், விண்ணில் வாழும் தேவர்களும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ரிஷிகளும் அருவமாக பூமியில் சஞ்சரிப்பதாகவும், அந்நேரத்தில் நாம் தூக்கத்திலிருந்து எழுந்து மனதார அவர்களை நாம் நினைத்து வணங்க, நம்மை அவர்கள் ஆசீர்வதிப்பதாக ஆன்மிக பெரியோர்களின் கருத்தாக உள்ளது.

Sivan

தினந்தோறும் இந்நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு எந்த ஒன்றிலும் புதுமையை படைக்கும் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாகத்தான் இந்து மதத்தின் படைப்பு கடவுளான “பிரம்மாவின்” பெயர் இந்நேரத்திற்கு சூட்டப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரம் என அழைக்கப்படுகிறது.

- Advertisement -

Thiyanam

விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இந்த நேரத்தில் பூமியெங்கும் பிரபஞ்சத்தின் நற்சக்திகள் நிறைந்திருக்கின்றன. இப்படியான நேரத்தில் எழுந்து வெளிப்புறத்தில் சிறிது நேரம் உலவுவதால் நமது உடலுக்கும், மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இந்த இறையாற்றல் மிக்க நேரத்தில் யோகம் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதால் விரைவாக இறையனுபவத்தை பெற இயலும். மாந்திரீக பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய நேரத்தில் மந்திரங்களை உரு ஜெபிப்பது, மந்திர சித்தியை ஏற்படுத்தி நீங்கள் விரும்பிய செயல்களை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
எத்தகைய சனி தோஷத்தையும் போக்கும் சனி தவம் இருந்த திருகொள்ளிக்காடு கோவில் பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Brahma Muhurtham time benefits in Tamil. It is also called as Brahma muhurta time. In Tamil, it is called as Brahma Muhurtham neram.