- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிகாலையில் விளக்கு ஏற்றும் முறை

அதிகாலையில் விளக்கு ஏற்றும் முறை

- Advertisement -

பொதுவாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவது என்பது மிகுந்த சக்தி வாய்ந்தது என்று நம் இந்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அதிகாலையிலேயே எழுந்து விளக்கேற்ற வேண்டும் என்கிற ஆவல் எல்லோருக்குள்ளும் இருக்கும். இருப்பினும் எல்லோராலும் அந்த வேலையை சிறப்பாக செய்ய முடிவதில்லை! பெரும்பாலும் வீட்டில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, எப்படி விளக்கு ஏற்றுவது? என்கிற ஐயம் தான் இதற்கு காரணமாக இருக்கும். இந்த ஐயத்தை நீக்கவே இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் முயற்சி செய்ய இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இப்போதைய சூழ்நிலையில் எல்லோரும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்வது என்பது கொஞ்சம் சாத்தியமற்றது தான். வீட்டில் இருக்கும் எல்லோரும் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். பணியில் ஒருவர் பகலிலும், ஒருவர் இரவிலும் கூட செய்வது உண்டு. இரவு பணி செய்பவர்களால் அதிகாலையில் எழுவது என்பது சாத்தியமற்றது. வீட்டின் மூத்த தலைவி அதிகாலையில் எழுந்து விளக்கு ஏற்ற வேண்டும் என்றால் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது என்பது நல்லதா? என்பது தான் இப்போதைய கேள்வி அல்லவா? பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லா விதமான தோஷங்களையும் நீக்க வல்லது! இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த சக்தியும் தன்னுள் கொண்டுள்ள இந்த நேரத்தை தான் பிரம்ம முகூர்த்தம் என்கிறோம். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்பவர்களுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது. பிரபஞ்ச ஆற்றல் அதிகமாகவும், மனம் ரொம்பவும் தெளிவாகவும் இருக்கும் நேரம் என்பதால் தான் அதன் சக்தி பன்மடங்கு அதிகமாக இருக்கிறது.

பிரம்ம முகூர்த்தம் என்பதே சக்தி வாய்ந்த நல்ல நேரம் தான் என்று சாஸ்திர நூல்கள் கூறுகிறது. நம் சாஸ்திரத்தின் படி காலையில் மற்றும் மாலை வேளையில் இருவேளையிலும் தீபம் ஏற்றி வீட்டில் வழிபடுபவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பதுதான் நம்பிக்கை. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழும்பொழுது குளிக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. வாயை கொப்பளித்து விட்டு, முகத்தை வெறுமனே தண்ணீரில் கழுவி விட்டு, விளக்கு ஏற்றி வைத்தால் அனைத்து தேவர்களின் ஆசிர்வாதமும், நல்ல தேவதைகளின் அனுக்கிரஹமும் கிடைக்கப்பெறும்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்தம் தோஷங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த நேரத்தில் யார் தூங்கிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை! முதலில் எழுந்து கொள்பவர்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வைக்கலாம். ஒரு முகூர்த்தம் என்பது 48 நிமிடம் ஆகும். சூரிய உதயம் ஆகும் நேரத்துக்கு முன் 1 மணி 36 நிமிடம் (அதாவது 2 முகூர்த்தங்கள்) தான் “பிரம்ம முகூர்த்தம்” என்று கூறப்படுகிறது. உங்கள் ஊரில் சூரிய உதயம் காலை 6:00 மணிக்கு இருந்தால், பிரம்ம முகூர்த்தம் 4:24 முதல் 5:12 வரை இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
அமாவாசையில் வாங்க வேண்டிய பொருட்கள்

இதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கக்கூடிய சூரிய உதய நேரத்தை கணக்கிட்டு பிரம்ம முகூர்த்தத்தை குறித்துக் கொள்ளலாம். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்ள முடியாதவர்கள் சாதாரணமாகவே காலையில் எழுந்ததும் முதல் வேலையாக முகத்தை கழுவி, பல்துலக்கி விட்டு, வாசல் தெளித்து கோலம் இட்ட பின்னர் பால் காய்ச்சும் பொழுது, ஒரு டம்ளர் பாலை பூஜை அறையில் வைத்து பின் விளக்கேற்றி வைத்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியவில்லை என்று வருத்தம் கொள்ள வேண்டாம்.

சற்று முன்