வாழ்க்கையில் ஒருமுறையாவது நீங்கள் இந்த கோவிலுக்கு சென்றால் உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்!!

brahma
- Advertisement -

இந்த பதிவில் தமிழ்நாட்டில் தலைசிறந்த பிரசித்தி பெற்ற ஆலயங்ககளில் ஒன்றான, பிரமபுரிஸ்வரர் ஆலயத்தின் பெருமைகளைப்பற்றியும், வரலாற்று சிறப்பம்சங்களைப்பற்றியும், அதுமட்டுமின்றி சிவபெருமான் பிரம்மனுக்கு அளித்த சாபத்தைப்பற்றியும் நாம் இந்த பதிவில் காண போகிறோம்.

பிரம்மர், உலகில் எல்லா கடவுள்களை விட தலைசிறந்தவன் என மிகவும் அகங்காரத்துடன் இருந்தார். அதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரமனுடைய அகங்காரத்தை அழித்து அவருடைய நிலை என்னவென்று உணர்த்த பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒரு தலையை வெட்டினார். பின்னர் சிவபெருமான் பிரம்மனிடம் இருக்கும் மிக சிறந்த சக்திகளில் ஒன்றான படைக்கும் சக்தியை செயலிழக்கும்படி சாபத்தை கொடுத்தார். சிவபெருமான் கொடுத்த சாபத்தினால் மனம் திருந்திய பிரம்மதேவர் அவருடைய சாபத்தில் இருந்து விடுபட திருப்பத்தூரில் உள்ள பிரம்மபுரீஸ் ஆலயத்தை வழிப்பட்டார்.

- Advertisement -

சிவனுக்காக துவாத சிலை அதாவது 12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரமனுடைய வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனுக்கு திரும்பவும் அவருடைய படைப்பாற்றலை மீண்டும் அளித்தார் சிவபெருமான். பிரம்மனுக்கு ஒரு வாரமும் கொடுத்தார். உன்னோட வழிபாட்டில் மகிழ்ந்த நான் உன்னோட தலையெழுத்தை மாற்றி அமைத்தது போல, உன்னை வழிபடுவர்களுக்கு அவர்களுடைய தலையெழுத்தை மாற்றியமைக்கும் சக்தியை பிரம்மதேவருக்கு கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் கஜலட்சுமி , துர்க்கைஅம்மன், விநாயகர், ராமர் என 12 லிங்கங்களை வழிபடவும் செய்தார். மற்றொரு சிறப்பம்சமாக இக்கோவிலில் முக்கியமாக ஸ்தல விருட்சமான மகிழமரம் இடம்பெற்றிருக்கும். பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தனி சன்னதி இருக்கும் அதுவும் ராமர் அவருடைய முழு உருவத்துடன் காட்சி அளிப்பார். பிரம்மர் இத்தளதில் சிவனை வழிப்பட்டதால் இந்த தளத்திற்கு பிரம்மபுரீசு ஆலயம் என பெயர்பெற்றது.

நீங்கள் பிரம்மபுரிஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பொழுது மறக்காமல் உங்கள் ஜாதகத்தை கொண்டுசெல்லவேண்டும். பின்னர் உங்கள் ஜாதகத்தை பிரம்மர் சன்னதியில் வைத்து வழிபடுவதன் மூலம் உங்களுடைய பாவங்கள் எல்லாம் நீங்கி உங்கள் தலை எழுத்தே மாறிவிடும்.

- Advertisement -