- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திரத்தை சொன்னால் நீங்களும் கோடீஸ்வரர் தான்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திரத்தை சொன்னால் நீங்களும் கோடீஸ்வரர் தான்.

- Advertisement -

நல்ல வேலை செய்தோ அல்லது நல்ல தொழில் செய்தோ, வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விட வேண்டும் என்ற ஆசை யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு நிச்சயம் பயன்படும். என்றாவது ஒருநாள் அம்பானி ஆகிவிடலாம் என்ற கனவோடு தினமும் உழைத்தால் நிச்சயம் அந்த இடத்தை நாமும் பிடிக்க முடியும். அதற்கு விடாமுயற்சி கட்டாயம் தேவை.

அதே சமயம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளும் உங்களை வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற்றி விடும். இன்று வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் எல்லாம் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தங்களுடைய வேலைகளை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அந்த வகையில் இன்றும் நாம் பிரம்ம முகூர்த்த வழிபாட்டை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அமர்ந்து இந்த மந்திரத்தை மூன்று முறை சொன்னாலே போதும். நீங்கள் வாழ்க்கையில் சீக்கிரம் ஜெயித்து விடுவீர்கள். இதை யார் சொன்னது தெரியுமா மகா பெரியவா அவர்கள் தான்.

வாழ்க்கையில் ஜெயிக்க மந்திரம்

பிரம்ம முகூர்த்த நேரம் வழிபாடு என்பது காலை 4:00 மணியிலிருந்து 5:00 மணிக்குள் செய்ய வேண்டும். அதுதான் சரியான பிரம்ம முகூர்த்த நேரம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முகம் கழுவி விட்டு, பல் தேய்த்து விட்டு அமைதியாக ஓரிடத்தில் விரிப்பு விரித்து அமர்ந்து, உங்கள் மனதிற்கு பிடித்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மஹா பெரியவா அவர்களை நினைத்துக் கொண்டாலும் சரி, அல்லது இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வம் யாரை வேண்டும் என்றாலும் நினைத்து கொள்ளவும். பிறகு இரண்டு உள்ளங்கைகளை நன்றாக தேய்த்து உள்ளங்கைகளை பார்த்தபடி, ‘அம் பகவ’ என்ற மந்திரத்தை வெறும் மூன்று முறை சொல்லிவிட்டு, பிறகு உங்களுடைய பிரார்த்தனையை பிரபஞ்சத்திடும் வையுங்கள். அம் என்பது ஒரு மங்கள வார்த்தை. பகவ என்பது பகவானே குறிக்கிறது.

வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற வேண்டும் அல்லது வாழ்க்கையில் கடன் இல்லாமல் வாழ வேண்டும் வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்று எந்த வேண்டுதலை வைத்தாலும் சரிதான், அல்லது நல்ல வேலை கிடைக்கணும், நல்ல கணவன் கிடைக்கணும், நல்ல மனைவி கிடைக்கணும் இப்படிப்பட்ட வேண்டுதலையும் வைக்கலாம்.

- Advertisement -

அது உங்களுடைய சௌகரியம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து மேல் சொன்ன மந்திரத்தை மூன்று முறை சொல்லி, ஒரே ஒரு கோரிக்கையை பிரபஞ்சத்திலும் சொல்லி வர அந்த கோரிக்கை சீக்கிரம் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறிவிடும். இது மகா பெரியவா அவர்களால் ஒரு பக்தனுக்கு சொல்லபட்ட பரிகாரம். இதை நீங்களும் பின்பற்றி பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை விலக விநாயகர் மந்திரம்

சீக்கிரம் உங்களுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பணம் சேர வேண்டும் சீக்கிரம் கோடீஸ்வரராக வேண்டும் என்று நினைத்து கூட இந்த மந்திரத்தை சொல்லலாம். தவறு கிடையாது. ஆனால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து மந்திரத்தை சொல்லிவிட்டு உங்களுடைய அன்றாட வேலைகளை அப்படியே துவங்குவது சிறப்பு. மந்திரத்தை சொல்லிவிட்டு திரும்பவும் போய் தூங்க கூடாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலன் பெறவும்.

சற்று முன்