மீந்து போன பழைய பிரட் துண்டுகளை கூட இனி வேஸ்ட் பண்ணாம செம டேஸ்டான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸை அஞ்சே நிமிஷத்துல எப்படி ரெடி பண்றதுன்னு பாக்கலாமா?. அதுவும் இந்த மழை நேரத்துக்கு இந்த ஸ்னாக்ஸ் செம்மையை இருக்கும்.

- Advertisement -

இந்த பிரட் பொருத்தவரைக்கும் எப்பவுமே நம்ம வாங்கி வந்து சாப்பிட்ட பிறகு அந்த நேரத்துக்கு ஆசையா கொஞ்சம் சாப்பிடுவோம். அப்படி இல்லைனா ஏதாவது ஒரு டிஷ் செய்வோம். அதன் பிறகு எடுத்து வைக்கிற அந்த பிரட் அப்படியே தான் இருக்கும்அதை ரொம்ப நாளும் வைத்திருக்க முடியாது வீணா போயிடும். இனி அந்த மாதிரி பிரட்யை வீணா தூக்கி போட வேண்டிய அவசியமே இல்லை. உங்களுடைய தேவைக்கு பிறகு மீதம் இருக்கும் பிரட்டை வச்சு இப்படி ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்திட்டா,ஸ்நாக்ஸுக்கான செலவும் மிச்சம், பொருளும் வீணாகாது, டேஸ்ட்டும் வேற லெவல்ல இருக்கும். அதை எப்படி செய்யறது அப்படிங்கறது இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம்.

தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கொத்து மல்லி இலை – 1 கைபிடி, காஷ்மீரி மிளகாய் தூள் – 1டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகு – 1/4 ஸ்பூன், சில்லி ஃப்ளக்ஸ் – 1/2 ஸ்பூன், சீரகம் -1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன், உப்பு – 1/4டீஸ்பூன், பிரட் சைஸ்- நாலு, முட்டை -1, எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

இதற்கு முதலில் வெங்காயத்தை நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் பொடியாக நறுக்கி அதையும் இந்த வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மிளகுத்தூள், சில்லி ஃப்ளெக்ஸ், உப்பு, இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்த பிறகு சீரகத்தை இடி உரலில் சேர்த்து லேசாக நசுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது எடுத்து வைத்திருக்கும் அந்த பிரட் துண்டுகளை ஒரு பவுலில் தண்ணீர் எடுத்து தண்ணீரில் இந்த பிரட்டை நனைத்து நல்ல ஈரம் இல்லாதவாறு பிழிந்து எடுத்து அதை இந்த வெங்காயத்தில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இவை அனைத்தையும் நன்றாக கலந்த பிறகு முட்டையை உடைத்து சேர்த்து கலக்க வேண்டும். முட்டையை சேர்த்த பிறகு இந்த வெங்காய கலவை கொஞ்சம் இளகளாக இருப்பது போல் தோன்றினால் இன்னொரு பிரெட்டை அது போல் தண்ணீரில் நனைத்து பிழிந்து இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான உடன் நீங்கள் கலந்து வைத்திருக்கும் வெங்காய பிரட் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதில் போட்டு எடுத்து விட வேண்டியது தான் சூப்பரான டேஸ்டியான பிரட் வெங்காய ஸ்னாக்ஸ் ரெடி.

- Advertisement -