வீட்டில் எதுவுமே இல்லையா? 4 பிரெட் துண்டு இருந்தா போதும் தட்டு நிறைய பக்கோடா செஞ்சிடலாமே!

bread-pakkoda1
- Advertisement -

எப்போதும் வீட்டில் ஏதாவது இருந்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில் எவ்வளவு தேடினாலும் எதுவுமே நம் கைகளுக்கு அகப்படாது. மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட ஏதாவது இருக்கிறதா? என்று தேடும் பொழுது உங்கள் கைகளுக்கு கிடைக்கும் காய்ந்து போன பிரெட் வைத்து இப்படி கூட செய்யலாமா? என்று ஆச்சரியமாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த ‘பிரட் பக்கோடா’! வீட்டில் எதுவுமே இல்லாத சமயத்தில் பிரட் துண்டுகளை வைத்து சட்டென எப்படி ஐந்தே நிமிடத்தில் பக்கோடா தட்டு முழுவதும் செய்து வைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

bread

‘பிரெட் பக்கோடா’ செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் – ஆறு, பெரிய வெங்காயம் – இரண்டு, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – இரண்டு, சமையல் எண்ணெய் – 100ml, கறிவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

‘பிரெட் பக்கோடா’ செய்முறை விளக்கம்:
உங்களிடமிருக்கும் பிரெட் துண்டுகளை குட்டி குட்டியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை தோல் நீக்கி நன்கு கழுவி துருவி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மல்லித் தழையை கழுவி காம்புடன் பொடி பொடிதாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

bread2

வெங்காயத்தை தோல் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையையும் அதே போல பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு பொடி பொடியாக நறுக்க முடியுமோ! அந்த அளவிற்கு காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பிரெட் துண்டுகளுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிரட்டில் இருக்கும் ஈரப்பதம் ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு ஏதுவாக இருக்கும். அதனால் கூடுதலாக நீங்கள் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

bread-pakkoda2

எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொண்டு நீங்கள் பிசைந்து வைத்துள்ள பிரட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து பக்கோடா போடுவது போல ஆங்காங்கே தூவி விடுங்கள். முன்னும் பின்னுமாக எல்லா பக்கங்களிலும் வெந்து வரும் படி திருப்பி விடுங்கள். பக்கோடா நன்கு பொன்னிறமாக பொரிந்ததும் எண்ணெய் வடிய எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் வையுங்கள்.

bread-pakkoda

அவ்வளவு தாங்க! ரொம்ப ரொம்ப சுவையாக இருக்க கூடிய இந்த பிரட் பக்கோடா ஐந்து நிமிடத்தில் சட்டென நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நாம் செய்து விட முடியும். வித்யாசமான சுவையுடன் கூடிய இந்த பிரெட் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வெங்காய பக்கோடா போலவே இதுவும் செய்வதற்கு மிகவும் சிரமமாக இல்லாமல் சுலபமாக இருக்கும். புதிதாக எந்த பொருட்களையும் தேட வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் எளிதான பொருட்களை கொண்டு வெகு விரைவாக செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடலாம்.

- Advertisement -