5 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சூப்பரான க்ரீமியான பிரட் சாண்ட்விச் தயார்.

bread-sandwich
- Advertisement -

சாண்ட்விச் என்றாலே பெரும்பாலும் அதை நாம் கடைகளுக்கு சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் உங்களுடைய வீட்டில் பிரட் பாக்கெட் இருக்கிறதா, அது போதும். வீட்டில் இருக்கும் மற்ற சில பொருட்களை வைத்தே சூப்பரான க்ரீமியான சாண்ட்விச் தயார் செய்துவிடலாம். இப்படி குழந்தைகளுக்கு சாண்ட்விச் செய்து கொடுத்தால் அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த சாண்ட்விச் செய்ய சீஸ், சாஸ் எதுவுமே நமக்கு தேவைப்படாது. வாங்க சுலபமான இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

bread-sandwich3

முதலில் அகலமான ஒரு பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, தேவையான அளவு உப்பு, சில்லி பிளக்ஸ் – 1 ஸ்பூன், பாலாடை – 2 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் சில்லி ஃப்ளேக்ஸ் இல்லை என்றால், பச்சைமிளகாயை பொடியாக வெட்டி கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம். (இதுதவிர துருவிய கேரட், துருவிய பன்னீர், குடைமிளகாய், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு போன்ற மற்ற காய்கறிகள் தேவைப்பட்டாலும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.)

- Advertisement -

நம்முடைய வீட்டில் பால் காய்ச்சும் போது மேலே ஆடை வரும். அந்த ஆடையை எல்லாம் எடுத்து வெங்காயம் தக்காளி கலவையுடன் போட்டு நன்றாக கலந்து கொண்டாலே போதும். இந்த ஸ்டஃப்பிங் சுவையாக இருக்கும். சாண்ட்விச் உள்ளே வைக்கக்கூடிய ஸ்டஃப்பிங் இப்போது நமக்கு தயாராக உள்ளது.

bread-sandwich2

இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் மில்க் பிரட் அல்லது கோதுமை பிரட் எது இருந்தாலும் பரவாயில்லை. அதில் இரண்டு பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு பிரட் துண்டுகளையும் மேல் பக்கத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக தயாராக இருக்கும் ஸ்டஃப்பிங்கை ஒரு பிரெட்டின் மேல் நன்றாக பரவலாக வைத்து விட்டு, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து செட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். (இதைப்போல் உங்களுக்கு எத்தனை பிரட் சாண்ட்விச் தேவையோ அத்தனை செட் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

அடுப்பில் தோசைக்கல்லை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய், நெய் அல்லது வெண்ணெய் எதை வேண்டுமென்றாலும் தடவிக் கொள்ளலாம். அதன் பின்பு தயாராக இருக்கும் பிரட் துண்டை கடாயில் வைத்து மேலே கரண்டியை வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் மிளகு சீரகம் இடிக்கும் சிறிய ஊரல் தடிமனாக இருந்தால் அதை கூட, இந்த பிரெட்டின் மேல் வைத்து செட் செய்யலாம். அப்போதுதான் இரண்டு பிரட் துண்டுகள் பிரிந்து வராமல் ஒட்டி பிடிக்கும். கடையில் கிடைக்கும் பிரட் சாண்ட்விச் போலவே இதனுடைய வடிவமும் நமக்கு கிடைக்கும்.

bread-sandwich4

பொன்னிறமாக இரண்டு பக்கத்திலும் சாண்ட்விச் சிவக்க வைத்து எடுத்து விடவேண்டும். இந்த பிரட் சாண்ட்விச்சை குறுக்கே கத்தியை வைத்து வெட்டி, அலங்காரத்திற்கு தேவைப்பட்டால் வட்ட வடிவில் வெட்டிய வெங்காயம், வட்டவடிவில் வெட்டிய வெள்ளரிக்காயை, வட்டவடிவில் வெட்டி தக்காளி என்று டெக்கரேஷன் செய்து உங்களுடைய குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்.

paal-aadai

நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு ருசி இந்த பிரட் சாண்ட்விச்சில் கிடைக்கும். இனி கடைக்குப் போய் நிறைய காசு செலவு பண்ணி தான் பிரட் சாண்ட்விச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -