உடலுக்கு ஆரோக்கியம் தரும் ‘ப்ரோக்கோலி கேரட் புலாவ்’ 15 நிமிடத்தில் சுலபமாக எப்படி செய்வது?

Broccoli-carrot2
- Advertisement -

ப்ரோக்கோலி பல அற்புதமான சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய அடிப்படைச் செல்களை அழிக்கும் ஆற்றல் இந்த ப்ரோக்கோலிக்கு உண்டு. மேலும் ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு வயோதிக காலத்தில் ஏற்படும் கண்பார்வை கோளாறுகளையும் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டுள்ளது. அதனுடன் கேரட் சேர்த்து புலாவ் செய்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் நொடிப்பொழுதில் தட்டு முழுக்க காலியாகிவிடும் உணவு வகையாக நிச்சயம் இருக்கும். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Broccoli-carrot

புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 2 கப், பட்டை – 2, கிராம்பு – 3, நறுக்கிய வெங்காயம் – 2, ஆய்ந்த பிராக்கோலி – 1 கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய கேரட் – 1/2 கப், தண்ணீர் – 4 கப், சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு மற்றும் மிளகுத்தூள் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

புலாவ் செய்முறை விளக்கம்:
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு களைந்து போதுமான தண்ணீர் சேர்த்து ஒரு அரை மணி நேரம் அளவிற்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். ப்ரோக்கோலி மற்றும் கேரட் வகைகள் நறுக்கி வைத்து தண்ணீர் சேர்த்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு வேக வைத்து கொள்ளுங்கள். அதன் பின் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நெய் சூடேறி காய்ந்ததும் அதில் தாளிக்க தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வர வேண்டும்.

Broccoli-carrot1

முதலில் பட்டை, கிராம்பு சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன்பின் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். லேசாக வறுபட்டதும் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து, வாசனைக்காக ஒரே ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வதனால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் எடுத்து வைத்த பிராக்கோலி மற்றும் கேரட்டை இவற்றுடன் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அனைத்தும் நன்கு வெந்து ஒன்றாக கலந்ததும் ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்துக் கொள்ளுங்கள். 2 கப் பாஸ்மதி அரிசிக்கு 4 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும் பொழுது காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் கொஞ்சம் கூட அதிகமாக ஊற்றி விடாதீர்கள்.

Broccoli-carrot3

பின்னர் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடிவிடுங்கள். உங்கள் குக்கருக்கு ஏற்ப ஒன்றிலிருந்து இரண்டு விசில் வரை வைத்தால் போதுமானது. அரிசி முழுக்க வெந்து காய்கறிகளுடன் கலந்து அட்டகாசமான சுவையில் இப்போது பரிமாற தயாராகி இருக்கும். மேலே மல்லி தலை அல்லது வெங்காயத் தாள்கள் நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

- Advertisement -

broccoli

ப்ரோக்கோலியில் ஒமேகா-3 இருப்பதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பை சேர விடாமல் தடுக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது எனவே இதய நோய்களை வர விடாமல் தடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தை சரி செய்யக்கூடிய வைட்டமின் கே இதில் நிறைந்து காணப்படுகிறது. ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுபவர்கள் எப்போதும் இளமையாக இருக்கலாம். அதனால் இதை இப்படி பிடித்தமான உணவாக சமைத்து சாப்பிட்டு நீங்களும் பலன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
மொறு மொறு ‘கோபி மஞ்சூரியன்’ ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில், கஷ்டப்படாம வீட்டிலேயே செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -