Jio, Airtel எல்லாம் கொஞ்சம் ஓரம் போங்க. வருகிறது BSNL 4G

BSNL
- Advertisement -

இந்திய தொலைத்தொடர்பு துறையில் மிகப் பழமையான நிறுவனம் என்றால் அது பிஎஸ்என்எல் நிறுவனம் தான். இந்த நிறுவனம் நேரடியாக அரசை சார்ந்த நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த மற்றும் மிக நீண்ட காலமாக தனது தரத்தை இழக்காமல் வரும் ஒரு நிறுவனமாக திகழ்கிறது.

Bsnl

இந்நிலையில் தற்போது வந்த பல தொலைதொடர்பு நிறுவனத்தின் வளர்ச்சியாலும் பெருக்கத்தாலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சற்று குறைந்து உள்ளனர் இருப்பினும் முழுவதுமாக இதிலிருந்து நீங்கி விடவில்லை மேலும் பலரும் இதனை நம்பக கரமான நிறுவனம் என்று கூறிவருவதால் நம்பிக்கை மிகுந்த நிறுவனம் என்ற பெயரையும் பிஎஸ்என்எல் எடுத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நீண்ட இழுபறிக்குப் பின் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தனது வாடிக்கையாளர்களை கவருவதற்காக விரைவில் அறிவிக்க உள்ளது. மேலும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் இத்துறையில் கடுமையான போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தனது தரத்தை தக்கவைக்க அவற்றிற்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையை வழங்க உள்ளது குறிப்பிடதக்கது.

BSNL

பல்வேறு வகையான நிறுவனங்களின் 30க்கும் மேற்பட்ட போன்களில் இந்த சோதனையை பிஎஸ்என்எல் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. எனவே விரைவில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 3ஜி சிம் கார்டுகளை மாற்றி அதற்கான 4ஜி சிம் கார்டுகளை இலவசமாக பெற்று இந்தத் திட்டத்தைத் தொடரலாம் என்றும் அறிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் 4ஜி சேவையில் வாடிக்கையாளர்களுக்கு மிக குறைந்த விலையில் அதிக டேட்டாக்களை வழங்கும் திட்டமும் பிஎஸ்என்எல் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலில் முழு விவரம் தற்போது வெளியிடப்படவில்லை என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான ஆஃபர்களை டேட்டாக்கள் மூலம் குறைந்த விலையில் வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -