ஜோதிடம் : உங்கள் ஜாதகத்தில் புதன் கிரகம் இப்படி இருந்தால் ஓஹோ வாழ்கை தான்

budhan
- Advertisement -

ஞாபக சக்தி என்பது இயற்கை மனிதர்களுக்கு அளித்திருக்கும் ஒரு அற்புத வரமாகும். இன்றைய காலத்தில் பலருக்கும் காலையில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட மறந்து போகும் அளவு ஞாபகத்திறன் குறைந்து கொண்டு வருகிறது. ஞாபக சக்தி, சிந்தனை திறன் ஆகியவற்றிற்கு காரகன் புதன் பகவான் ஆவார். ஜாதகத்தில் புதன் கிரகத்தோடு என்ன கிரகங்கள் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

budhan

பொதுவாக ஒருவரின் ஜனன ஜாதகத்தில் இருக்கும் 12 ராசி அல்லது வீடுகளில் குரு கிரகம் எந்த ராசி அல்லது வீட்டில் நின்றாலும் அந்த குரு கிரகம் பிற எந்த கிரகத்தோடும் சேராமல் தனித்து இருந்தால் அவ்வளவு உத்தமமான பலன்கள் இருக்காது என்றாலும் பாதகங்கள் ஏற்படாது. இந்த குரு பகவான் ஜனன ஜாதகத்தில் புதன் கிரகத்தோடு சேர்ந்திருப்பது மிகவும் சிறப்பு.

- Advertisement -

புத்திகாரகனாகிய புதன் கிரகம் முழு சுப கிரகமான குரு கிரகத்தோடு ஜாதகத்தில் எந்த ஒரு ராசி அல்லது வீட்டிலும் சேர்ந்திருப்பது மிகவும் சிறப்பான ஒரு அம்சமாகும். இப்படியான கிரக அமைப்பை கொண்டவர்கள் மிகுந்த ஞாபக சக்தியும், சிறந்த சிந்தனை சக்தியையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த சிந்தனை சக்தியை பிறருக்கு நன்மை தரும் காரியங்களை செய்ய பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

rahu 1

ஜனன ஜாதகத்தில் எந்த ஒரு ராசி அல்லது வீட்டிலும் புதன் கிரகத்தோடு மற்ற எந்த ஒரு கிரகத்தையும் விட ராகு கிரகம் சேர்ந்திருக்காமல் இருப்பது மிகவும் நல்லது. இத்தகைய கிரக அமைப்பை கொண்டவர்களுக்கும் சிறந்த ஞாபகத்திறன் மற்றும் சிந்தனை சக்தி இருக்கும் என்றாலும் அவற்றை தீய வழியில் செலுத்தும் குணமே இந்த ஜாதகர்களிடம் மேலோங்கியிருக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
மார்ச் மாத ராசி பலன் 2019

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budhan guru palan in Tamil. It is also called as Budhan graham in Tamil or Jathagathil guru in Tamil or Rahu graha in Tamil or Budhan guru serkai in Tamil.

- Advertisement -