- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு அமைய கூற வேண்டிய மந்திரம்

சொந்த வீடு அமைய கூற வேண்டிய மந்திரம்

- Advertisement -

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இல்லை. வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று எந்த அளவிற்கு ஆசைப்படுகிறார்களோ? அதே அளவிற்கு தான் சொந்த வீட்டில் இருப்பவர்களும் புதிதாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இந்த உலகத்தில் சொந்தமாக தனக்கென்று ஒரு இடம் வேண்டும் என்று ஆசைப்படாத நபரே இருக்க முடியாது.

அப்படி சொந்தமாக இருக்கக்கூடிய வீட்டை அவ்வளவு எளிதில் நம்மால் பெற முடியாது. அந்த வீட்டை கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ வருமானம் என்பது சீராக இருக்க வேண்டும். வருமானத்தை சேமித்து வைத்து அதன் மூலமே நம்மால் சொந்த வீடு வாங்க முடியும். இப்படி பணம் சேர்த்து வைத்தால் மட்டும் சொந்த வீடு வாங்கி விட முடியும் என்று நினைப்பதும் தவறு. நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கேற்றார் போல் தான் நமக்கு சொந்த வீடு வாங்குவதற்குரிய யோகமும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று தான் சொந்த வீடு, மனை, வாசல் வாங்கும் யோகம். இந்த யோகம் கிடைக்க வேண்டும் என்றால் செவ்வாய் பகவானின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். செவ்வாய் பகவானின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் செவ்வாய் பகவானுக்குரிய அதிபதியான முருகப்பெருமானின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இப்படி முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சொந்த வீடு அமைய கூற வேண்டிய மந்திரம்

பொதுவாக செவ்வாய் பகவானுக்கு அதிபதியாக திகழக்கூடிய முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் முருகப் பெருமானை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு. முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது ஒரு புறம் இருந்தாலும் வீட்டிலேயே முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாடு நமக்கு பலனைத் தரும். முழு மனதோடு செய்யக்கூடிய எந்த வழிபாட்டிற்கும் அதற்குரிய பலன் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் ஒரு நெய் அகல் விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த விளக்கின் தீபமானது கிழக்கு பார்த்தவாறு எரிய வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக சுத்தமான பசும்பால் அல்லது சுத்தமான தண்ணீரை வைக்க வேண்டும். பிறகு நாம் வடக்கு பார்த்தவாறு நின்று கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

ஓம் மங்கள கார்த்திகேயா சரவணபவா ஹ்ரீம் காரிய சித்திதராயே நமோ நம!

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் அதிகரிக்க ஆடி அமாவாசை வழிபாடு

இப்படி தொடர்ச்சியாக 27 வாரங்கள் இந்த மந்திரத்தை ஒருமுறை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செவ்வாய்க்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் விரைவிலேயே சொந்தமாக வீடு வாங்குவதற்குரிய அமைப்புகளும் யோகங்களும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்