கஷ்டப்பட்டு ஒரு தொழிலை ஆரம்பித்து அந்த தொழிலின் மூலம் சிறப்பான வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்று நினைத்து தான் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு சுய தொழிலை ஆரம்பித்து செயல்படுகிறார்கள். அது சிறிய அளவில் இருக்கக்கூடிய தொழிலாக இருந்தாலும் பெரிய அளவில் இருக்கக்கூடிய தொழிலாக இருந்தாலும் அனைவரின் எண்ணமும் அதில் லாபத்தை ஈட்ட வேண்டும் என்பது மட்டுமே. தொழில் எந்த அளவிற்கு சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த அளவிற்கு லாபமும் உண்டாகும். ஆனால் பலருக்கும் தொழிலை ஆரம்பித்ததோடு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் போகக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். அதேசமயம் கைக்கு வரக்கூடிய வியாபாரமானது கைநழுவி செல்லக்கூடிய அளவிற்கு போகும். இவை அனைத்திற்கும் காரணமாக திகழக்கூடியது தொழில் செய்யும் இடத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் தான். அந்த எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு கல் உப்பை வைத்து செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வியாபாரத்தில் இருக்கும் தடைகள் நீங்க
கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்றாலும் கல்லுப்பு எதிர்மறை ஆற்றல்களை நீக்கக்கூடியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட கல் உப்பை நாம் பல விதங்களில் திருஷ்டி கழிப்பதற்காகவும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதற்காகவும் பயன்படுத்தி இருக்கிறோம். இதே கல் உப்பை பயன்படுத்தி தான் வியாபாரத்தில் இருக்கக்கூடிய தடைகளையும் நீக்கப் போகிறோம், அதே சமயம் வியாபாரத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களையும் நீக்க போகிறோம். கல்லுப்பு பரிகாரத்தை செய்வதோடு இன்னும் சில பரிகாரங்களையும் சேர்த்து செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் வியாபாரத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் தவிடு பொடி ஆகும்.
இதற்கு ஒரு பீங்கான் தட்டு அல்லது கிண்ணம் வேண்டும்.வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. இதில் கல் உப்பை பரப்பி அதற்கு மேல் மஞ்சள் தூளை தூவி தொழில் செய்யும் இடத்தில் நான்கு மூலையிலும் வைக்க வேண்டும். இதை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாற்றி புதிதாக வைக்க வேண்டும். பழைய உப்பை கால்படாத இடத்தில் போட்டு விட்டு அந்த கிண்ணத்தை சுத்தம் செய்து புதிய உப்பை பரப்பி வைக்க வேண்டும். அதேபோல் வெள்ளிக்கிழமை தோறும் தேங்காயில் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுத்தி உடைப்பதன் மூலமும் தொழிலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும்.
இதோடு வெள்ளை குங்கிலியம், பூண்டின் தோல், காய்ந்த அருகம்புல், வெண்கடுகு இவை அனைத்தையும் கலந்து தூபம் போட வேண்டும். இந்த தூபத்தை தினமும் காலையிலும் மாலையிலும் வியாபாரம் செய்யும் இடத்தில் போட்டு அந்த புகை முழுவதும் பரவுவது போல் போட வேண்டும். இப்படி போடுவதன் மூலமும் நாம் செய்யக்கூடிய தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். இயற்கையாகவே நமக்கு ஏற்பட்ட தடைகளாக இருந்தாலும் பிறரால் நமக்கு ஏற்பட்ட எதிர்மறை ஆற்றல்களின் விளைவால் உண்டான தடைகளாக இருந்தாலும் இவை அனைத்தையும் நீக்குவதோடு எதிரிகள் மற்றும் துரோகிகள் நம்மை விட்டு விலகுவதற்குரிய வழியும் உண்டாகும்.
மேலும் தினமும் காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது “ஓம் கம் கணபதியே நமஹ” என்று விநாயகப் பெருமானின் மந்திரத்தை கூறிவிட்டு ஒரு அருகம்புல்லை நம் உடன் எடுத்துச் செல்வதன் மூலம் அன்றைய நாளில் தொழிலில் சிறந்து விளங்க முடியும். முக்கியமான கலந்துரையாடல் நடக்கக்கூடிய சமயத்தில் இதைப் பின்பற்றுவதன் மூலம் அந்த கலந்துரையாடல் வெற்றி அடையும். அதேபோல் தொழில் ரீதியாக யாரையாவது சந்திக்க செல்கிறோம் என்னும் பட்சத்தில் இதைப் பின்பற்றுவதன் மூலம் அந்த சந்திப்பு வெற்றியடையும்.
இதையும் படிக்கலாமே:இன்று வளர்பிறை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மந்திரம்
கஷ்டப்பட்டு தொடங்கக்கூடிய தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு முழு முயற்சியோடு முழு நம்பிக்கையையும் சேர்த்து இந்த பரிகாரங்களையும் செய்து பாருங்கள். உங்கள் தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகி தொழிலில் வெற்றி அடைவீர்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.