சூப்பரான பட்டர் முறுக்கு செய்வது இவ்வளவு ஈசியா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே.

murukku
- Advertisement -

மொறு மொறுன்னு சூப்பரான அசத்தலான சுவையில் ஒரு பட்டர் முறுக்கு ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில கடைகளில் முறுக்கு வாங்கி சாப்பிட்டால் மொறுமொறுன்னு இருக்கும். அதே சமயம் அந்த முறுக்கை மென்று சாப்பிடுவதில் எந்த கஷ்டமும் இருக்காது. சாப்பிடும்போது தொண்டையில் கரையும். அப்படிப்பட்ட சூப்பரான பட்டர் முறுக்கு ரெசிபி உங்களுக்காக. இதை செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸிங்க.

pottu-kadalai

முதலில் 1/2 கப் அளவு பொட்டுக்கடலையை எடுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இது தனியாக அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அகலமான பௌலில் அரிசி மாவு- 2 கப், அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவு, தேவையான அளவு உப்பு, சீரகம் – 1 ஸ்பூன், மிளகு தூள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் கலந்து விட்டு விட வேண்டும். (அரிசி மாவை எந்த கப்பில் அளந்து இருக்கிறீர்களோ, அதே கப்பில் பொட்டு கடலையையும் அளந்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பொட்டுக்கடலையை அரைப்பதற்கு முன்பாகவே அளந்து விட வேண்டும்).

butter-vennai

அடுத்தபடியாக ஒரு சிறிய கடாயில் 3 டேபிள்ஸ்பூன் அளவு வெண்ணெயை ஊற்றி, வெண்ணையை உருக்கி சுடச்சுட இருக்கும் வெண்ணையை மாவோடு சேர்த்து கலந்து விட்டுவிட வேண்டும். இந்த வெண்ணெயை மாவில் எல்லா பகுதிகளிலும் படும்படி கலந்து கொள்ளுங்கள். சூடான வெண்ணையில் கையை வைத்து விடாதீர்கள், ஜாக்கிரதை.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து எப்போதும்போல முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த முறுக்கு மாவை முறுக்கு அச்சில் போட்டு, ஸ்டார் அச்சில் போட்டு அப்படியே எண்ணெயில் பிழிந்து விட்டால் முறுக்கு நீல நீளவாக்கில் விழும். (அடுப்பில் எண்ணெயை நன்றாக சூடு பண்ணி விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு முறுக்கை நேரடியாக எண்ணெயிலேயே பிழிய வேண்டும்.)

murukku2

முறுக்கு எண்ணெயில் இரண்டு நிமிடங்கள் வரை அப்படியே இருக்கட்டும். கரண்டியை வைத்து உடனடியாக கிளறினால், முறுக்கு அதிகமாக உடைவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த முறுக்கில் வெண்ணெய் சேர்த்திருப்பதால் இந்த மாவு ரொம்ப ரொம்ப சாஃப்டா இருக்கும். முறுக்கு சுட்டு எடுக்கும்போது பக்குவமாக சிவக்க வைக்க வேண்டும்.

murukku1

முறுக்கு எண்ணெயில் வெந்து சிடசிடப்பு அடங்கும்வரை வேக வைத்திருந்தால் போதும். சூப்பரான பட்டர் முறுக்கு தயார். இந்த முறுக்கு சிவந்த பொன் நிறத்திற்கு வரவேண்டாம். வெள்ளையாகத் தான் இருக்கவேண்டும். பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும் இந்த முறுக்கை சுவைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும். இந்த பட்டர் முறுக்கு உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -