‘முட்டைக்கோஸ் சாம்பார்’ இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்! வீடே கமகமன்னு மணக்கும்.

cabbage-sambar1
- Advertisement -

முட்டைக்கோஸ் கொண்டு விதவிதமான உணவு வகைகளை தயார் செய்தாலும் ஒரு முறை இப்படி சாம்பார் வைத்து பாருங்கள். நீங்களே அசந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். மிக மிக சுலபமாக சட்டென செய்து விடக் கூடிய இந்த சாம்பார், சாம்பார் வகைகளிலேயே வித்தியாசமான சுவையுடன் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த முட்டைக்கோஸ் சாம்பார் எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

cabbage

அன்றாட உணவு வகைகளில் முக்கிய பங்காக காய்கறி பட்டியலில் இடம் பெற்றிருப்பது முட்டைகோஸ். முட்டைக்கோஸ் பிடிக்காதவர்கள் கூட இப்படி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அடிக்கடி கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

- Advertisement -

முட்டைக்கோஸ் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
200 கிராம் – முட்டை கோஸ், 100 கிராம் – துவரம் பருப்பு, 1 – வெங்காயம், 1 – பெரிய தக்காளி, 2 – பச்சை மிளகாய், 1/2 டீஸ்பூன் – சீரகம், 2 டீஸ்பூன் – சாம்பார் தூள், 1 டீஸ்பூன் – மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் – மஞ்சள் தூள், 1 கப் – அரைத்த தேங்காய் விழுது, நெல்லிக்காய் அளவிற்கு புளி.

cabbage

முட்டைக்கோஸ் சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் புளியை ஊற வைத்துக் கொள்ளுங்கள், துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி அலசி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இவற்றைத் தாளித்து வெங்காயத்தை வதக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள முட்டை கோஸ்களை சேர்த்து அந்த எண்ணெயிலேயே பச்சை வாசம் போக வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, சாம்பார் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மேலே கொடுக்கப்பட்ட அளவின் படி சேர்த்துக் கொண்டு நன்கு வதக்க வேண்டும். மசாலா வாசனை போனதும் தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியைக் கரைத்து இவற்றுடன் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் துவரம்பருப்பை, பூண்டு பல் 2, சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் சேர்த்து 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சாம்பாருடன் இந்த துவரம் பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொள்ள வேண்டும். அனைத்தும் கலந்து சாம்பார் கெட்டியானதும் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

cabbage-sambar

பின்னர் தாளிப்பு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, இரண்டு வரமிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்தம் செய்து சாம்பாருடன் கொட்ட வேண்டும். அவ்வளவுதாங்க! சட்டென பத்தே நிமிடத்தில் முட்டைக்கோஸ் சாம்பார் செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டைகோஸில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை நரம்புகள் பிரச்சனை தீரும்.

- Advertisement -

cabbage

இதில் இருக்கும் சுண்ணாம்புச் சத்து எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவூட்ட கூடியது. உடல் சூட்டைத் தணித்து உடலில் இருக்கும் சளியை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது. சாம்பார், கூட்டு, பொரியல் என்று அனைத்து விதமான உணவுப் பொருட்களிலும் முட்டைகோஸ் பயன்படுத்தலாம். நீங்களும் உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் சாம்பார் வைத்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
‘மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்’ இப்படி ஒரு முறை வைத்துப் பாருங்கள்! அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -