விரதம் இருப்பவர்கள் கட்டாயம் எதையும் சாப்பிட கூடாதா?

viradhaml
- Advertisement -

சதுர்த்தி, அம்மாவாசை, பவுர்ணமி, கிருத்திகை என பல முக்கிய நாட்களில் பலர் விரதம் இருப்பது வழக்கம். விரதம் இருப்பவர்கள் பொதுவாக எதையும் சாப்பிடுவதில்லை. உண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக்கூடாதா?. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன? வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

Sivan

விரதம் என்பதற்கு, “உரிய முறையில் வழிபாடு செய்தல்” என்பதே பொருள். உரிய முறையில் வழிபாடு செய்வதற்கு அகத்தூய்மை மிகவும் முக்கியம். ஒருவர் உணவருந்தாமல் விரதம் இருந்து தேவையற்ற சிந்தனைகளை எண்ணத்தில் ஓடவிட்டால் அதில் எந்த பலனும் இல்லை.

- Advertisement -

விரதம் இருப்பவர்கள் அந்த ஒருநாளைக்கு சுகபோக வாழ்க்கையை மறந்து, உணவு, உறக்கம் ஏதுமின்றி இறைவனின் நாமத்தை மட்டுமே ஜபித்துக்கொண்டு, அவரின் நினைப்பாகவே இருப்பதே மிக சிறந்த விரதம்.

உடம்பிற்கு முடியாதவர்கள் மதியவேளை உணவை மட்டும் அருந்திவிட்டு, காலை மற்றும் இரவு நேரங்களில் பால் பழம் சாப்பிடுவதில் தவறில்லை. அனால் விரத நாட்களில் இறைவனின் எண்ணம் இல்லாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

- Advertisement -