பூஜை அறையில் எந்திரங்கள் வைத்து வழிபடுவது சரியா?

0
936
endhiram in puja
- விளம்பரம் -

ஒரு வீட்டிற்கு மிகவும் முக்கியமானது பூஜை அறையில் எந்தெந்த சாமி படங்களை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது இப்படி பல விடயங்கள் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல் பூஜை அறையில் விக்கிரங்கள், எந்திரங்கள் போன்றவற்றை வைக்கலாமா என்ற தகவலும் சாஸ்திரத்தில் உண்டு. வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

puja room

எந்தெந்த படங்களை வைக்கலாம்:

Advertisement

வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான் போன்ற தெய்வத்தின் படங்களை வைக்கலாம்.

அதோடு தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் விநாயகர், காமாக்ஷி, விசாலாக்ஷி, மீனாக்ஷி , அஷ்டலக்ஷ்மி, லலிதாம்பாள் மற்றும் ஒரு ஜான் அளவிற்கு கீழ் உள்ள சிவலிங்கம் போன்ற வற்றை வைத்து வழிபடலாம்.

எந்தெந்த படங்களை வைக்கக்கூடாது:

பொதுவாக எந்த உக்ர தெய்வத்தின் படங்களையும் பூஜை அறையில் வைக்ககூடாதது. உக்ர தெய்வம் நமது குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் அதன் படத்தை வைக்கலாம். அதோபோல் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் போன்றவற்றையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது.

kaali God

எந்திரங்களை வைக்கலாமா?

ஸ்ரீசக்ரம், மேரு மற்றும் எந்திரங்களை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு அதை வைத்து வீட்டில் தியானமோ, ஜெபமோ செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும். சில எந்திரங்களை நாம் வீட்டில் வைத்துவிட்டு ஏனோதானோ என்று இருந்தால் அவை விபரீதமான கெடுபலன்களை தரும்.

endhiram

விக்ரகங்களை பூஜை அறையில் வைத்தால் என்ன செய்ய வேண்டும்?

கட்டை விறல் அளவை விட சிறிய விக்ரகங்களை பூஜை அறையில் வைத்து எல்லோரும் வழிபடலாம். அனால் ஒரு ஜான் அளவை விட பெரிய விக்ரகங்களை பூஜை அறையில் வைத்தால் தினமும் அதற்கு அன்னமோ அல்லது  நெய்வேதியமோ வைத்து படைக்கவேண்டும். வாரம் ஒருமுறையாவது நிச்சயம் அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement