சிதிலமடைந்த தெய்வ சிலைகளை கோவிலில் வழிபடலாமா?

damaged-statue
- Advertisement -

சில கோவில்களில் பழங்காலத்தை சேர்ந்து சில சிலைகள் சிதிலமடைந்திருக்கும். அதை வழிபடலாமா வேண்டாமா என்ற குழப்பம் பலரது மனத்திலும் நிலவுவது வழக்கம். எப்படி இருந்தால் என்ன அது தெய்வத்தின் சிலை தானே என்று சிலர் வழிபடுவர். சிலர் வழிபடாமல் இருப்பார். உண்மையில் அத்தகைய சிலைகளை வழிபடுவது சரியா என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

amman statue

தெய்வச் சிலையின் உருவத்தை மூன்றுவகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். அவை

- Advertisement -

பிரத்யங்கம்
உபாங்கம்
அங்கம்

பிரத்யங்கம்
கை மற்றும் கால்களில் உள்ள விரல்கள், ஆயுதங்கள், கிரீடம் ஆகியவையே பிரத்யங்கம். இவைகளில் ஏதாவது சிதிலமடைந்திருந்தால் எந்த தோஷமும் இல்லை. அந்த சிலையை தாராளமாக வழிபடலாம். கோவில் கும்பாபிஷேகத்தின் போது அந்த சிலையை சரி செய்துகொள்வது சிறந்தது.

- Advertisement -

உபாங்கம்
கை, கால்கள், தலை முதலியன உபாங்கம் ஆகும். இவற்றில் ஏதாவது சிதிலமடைந்திருந்தால் அதை உடனே சரிசெய்து பிராயச்சித்த கும்பாபிஷேகம் செய்த பிறகே வழிபட வேண்டும்.

அங்கம்
முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, தொடை முதலியன ஒரு சிலையின் முக்கிய அங்கங்கள் ஆகும். இவற்றில் சரிசெய்யமுடியாதபடி சிதிலம் இருந்தால் அந்த சிலைகளை வழிபடுவதில் பயனில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்வதே சிறந்தது.

மேலே கூறப்பட்டுள்ள விதிகள் அனைத்தும் மனிதர்கள் வடித்த சிலைகளுக்கே தவிர சுயம்புவாக தோன்றிய தெய்வச் சிலைகளுக்கு இது பொருந்தாது. அதில் எப்பேர்ப்பட்ட சிதிலம் ஏற்பட்டாலும் அதை சரி செய்து வழிபடுவதே சிறந்தது.

- Advertisement -