- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நீங்கள் இதுவரை சுவைக்காத சுவையில் கேரமல் பாயாசம்! ஈசியாக குக்கரில் செய்வது எப்படி?

நீங்கள் இதுவரை சுவைக்காத சுவையில் கேரமல் பாயாசம்! ஈசியாக குக்கரில் செய்வது எப்படி?

- Advertisement -

இனிப்பு என்றாலே பிடிக்காதவர் என்று எவருமில்லை. இனிப்பு சுவையை சுவைக்க வயது வரம்பு என்பதே கிடையாது. சுவைமிக்க இந்த இனிப்பு வகையான உணவுகளை வீடுகளில் விசேஷ நாட்களிலும், பூஜை நாட்களில் மட்டும்தான் செய்வதுண்டு. பொதுவாக இனிப்பு பலகாரம் செய்வதற்கு அதிக நேரம் செலவு செய்யவேண்டி உள்ளதால் இனிப்பு உணவுகளை அதிகம் வீடுகளில் செய்வதில்லை. ஆனால் இந்த கேரமல் பாயாசத்தினை பத்து நிமிடங்களில் செய்துவிடலாம். எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

payasam

மூன்றே பொருள் வைத்து இந்த சுவைமிக்க கேரமல் பாயாசத்தை செய்யப்போகிறோம். வழக்கமாக செய்யும் பாயாசத்தின் சுவையை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதையும், இந்த பாயாசத்தினை எப்படி ஈசியாக அதிக நேரம் செலவில்லாமல் குக்கரில் செய்வது என்பதையும் இந்தப் பதிவினை தொடர்ந்து வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள் :
ஒரு கப் – பாஸ்மதி அரிசி
2 கப் – சர்க்கரை
ஒரு லிட்டர் – பசும்பால் அல்லது ஆவின் பால்
ஒரு ஸ்பூன் – ஏலக்காய்த்தூள்.

basmathi arisi

ஒரு கிண்ணத்தில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி நன்றாக ஊறிய பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அரிசி சிறிது சிறிதாக உடையும் அளவிற்கு மட்டும் அரைத்து எடுக்க வேண்டும். இதனை கவனமாக செய்ய வேண்டும். கொஞ்சம் அதிகமாக அரைத்தாலும் பேஸ்ட் போன்று மாறிவிடும்.

- Advertisement -

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது குக்கரை வைத்து குக்கர் நன்றாக சூடானதும் சர்க்கரையை அதில் போட வேண்டும். சர்க்கரை குக்கரின் சூட்டிலேயே கரைய ஆரம்பிக்கும். அடுப்பின் தீயை லேசாக வைத்திருக்க வேண்டும். சர்க்கரை சிறிது நேரத்தில் நன்றாக ஒரு திரவம் போல் மாறி வரும். சர்க்கரை திரவம் ஒரு மஞ்சள் வண்ண நிறத்திற்கு மாறி வரும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மஞ்சள் நிறத்தில் சற்று இளகி வந்திருக்கும். இப்பொழுது சர்க்கரை கேரமெல் தயாராகிவிட்டது.

vella pagu

பின்னர் இந்த கேரமிலுடன் பசும்பால் அல்லது ஆவின் பாலை சேர்த்து, அடுப்பின் தீயை சற்று அதிகரித்துக் கொண்டு கிளற வேண்டும். இப்பொழுது பாலுடன் சேர்ந்து கேரமல்லையும் நன்றாக கலந்துவிட கேரமெல் கண்ணாடி துகள்கள் போன்று கட்டிகளாக மாறிவிடும். அப்பொழுது அதனுடன் அரைத்து வைத்துள்ள அரிசியையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.

இந்த சமயத்தில் குக்கரை மூடி விசில் போட வேண்டும். சிறிது நேரத்தில் ஒரு விசில் வந்ததும் அடுப்பை அனைத்து குக்கரை இறக்கி வைக்க வேண்டும். பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து அதனுடன் ஏலக்காய் தூளை சேர்த்து கலந்து விட வேண்டும். இப்பொழுது கம கம வாசத்துடன் சுவைமிக்க கேரமல் பாயாசம் தயாராகிவிட்டது.

payasam

பின்னர் வீட்டில் உள்ளவர்களுக்கு பாயாசத்தை பரிமாறி கொடுங்கள். பாயாசத்தை சுவைத்ததும் இதன் சுவைக்கு அனைவருமே அடிமையாகிவிடுவார்கள். இவ்வளவு ஈஸியான சுவைமிக்க இந்த பாயசத்தை இனிமேல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி செய்து கொடுங்கள். உங்களுக்கு பாராட்டுகள் கிடைத்து கொண்டே இருக்கும்.

சற்று முன்