அடிக்கிற வெயிலுக்கு ஒரு வாட்டி கேரட் ஜூஸ் இப்படி போட்டு குடிச்சி பாருங்க. எனர்ஜி லெவல், வேற லெவல்! எவ்வளவு வெயில் அடிச்சாலும் வாடி போக மாட்டீங்க.

carrot-juice

அடிக்கிற வெயிலுக்கு கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வீட்டில் இயற்கையான பொருட்களை வாங்கி சாறு எடுத்து கெட்டுப் போகாத வகையில் பாட்டிலில் ஊற்றி எடுத்துக் கொண்டு வெளியே செல்லலாம். வெயிலில் நம்முடைய உடலில் எனர்ஜி லெவல் குறையும் போது, இப்படிப்பட்ட இயற்கையான சாறுகளை குடிக்கும்போது நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். அந்த வகையில் ஒரு சூப்பரான கேரட் ஜூஸ் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

carrot-juice1

பொதுவாகவே கேரட் நம்முடைய சருமத்திற்கு மிகவும் நல்லது. சூரியனின் சக்திவாய்ந்த கதிர்வீச்சை இந்த வெயில் காலத்தில் நம்முடைய சருமம் தாங்க வேண்டுமென்றால் கேரட்டை கட்டாயம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கேரட் ஜூஸை தயாரிப்பார்கள். இது கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால் சுவை மிகவும் அலாதியானது.

இந்த ஜூஸ் போட தேவையான பொருட்கள். இளசாக இருக்கும் கேரட் 200 கிராம். காம்போடு இருக்கும் கொத்தமல்லித்தழை – 2 இனுக்கு, புதினா இலைகள் – 3, எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன், தேன் அல்லது சர்க்கரை உங்களது தேவைக்கு ஏற்ப, இஞ்சி – 1 சிறிய துண்டு.

முதலில் கேரட்டை தோல் சீவி ஓரளவிற்கு மிக்ஸியில் போட்டு அரைக்க சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய துண்டு இஞ்சியைத் தோல் சீவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லித் தழையையும் புதினாவையும் தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் முதலில் நறுக்கிய கேரட் துண்டுகள், நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி தழை, புதினா இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு வடிகட்டியில் ஊற்றி கேரட் திப்பியிருந்து நன்றாக அழுத்திப் பிழித்து சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

carrot-juice2

இந்த ஜூஸ்ல் ரொம்பவும் தண்ணிரை ஊற்றி விடக்கூடாது. கேரட்டின் மனம் ஜூஸில் இருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீரை பார்த்து, ஊற்றிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த கேரட் ஜூஸில் இறுதியாக 1/2 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து தேவைப்பட்டால் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறி பாருங்கள். ஐஸ் கட்டிகள் போடாமலும் அப்படியே கண்ணாடி தம்ளரில் ஊற்றி குடித்தாலும் உடனடியாக உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

carrot-juice3

அடிக்கின்ற வெயிலில் உங்களது சருமத்தை பாதுகாக்க இது ஒரு பெஸ்ட் ரெமிடி. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் எல்லோரும் வாரத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் தாராளமாக இந்த ஜூஸ் குடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இயற்கையாகவே கேரட் இனிப்புத் தன்மை கொண்டது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.