இந்த லாக்டவுன்ல, உங்களுடைய முகத்தை பளிச்சின்னு வச்சுக்க என்ன செய்யப் போறீங்க? வேணும்னா இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க! சில நாட்களிலேயே பியூட்டி குயின் ஆகிவிடலாம்.

face5
- Advertisement -

இந்த லாக்டவுன் காலத்தில் உங்களை அழகாக்கிக் கொள்ள பியூட்டி பார்லர் செல்ல முடியாது. செயற்கையான அழகு படுத்தும் பொருட்களும் நமக்கு சுலபமாக கிடைக்காது. என்ன செய்வது? இயற்கையான முறையில் நம்மை நாமே அழகாக மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். தினமும் நமக்கு காய்கறிகள் இப்போது கிடைக்கத்தான் செய்கிறது. அந்த காய்கறிகளை வைத்து அழகை எப்படி பாதுகாப்பது? வெறும் இரண்டே காய்கறிகள் போதும் நம்முடைய அழகை, மேலும் அழகு படுத்திக் கொள்ள. அந்த இரண்டு காய்கறிகள் என்னென்ன. அதை எப்படி நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

carrot-juice1

சமையலுக்கு பயன்படுத்த கூடிய உருளைக்கிழங்கு கேரட் இரண்டையும் தோல் சீவி பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் மைய அரைத்துக் கொள்ளுங்கள். இதில் பால் ஆடை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பால் ஊற்றி விழுது போல தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

நம்முடைய அழகை மேம்படுத்த போகும் ஃபேஸ் மாஸ்க் ரெடி. எவ்வளவு சிம்பிளான ரிமெடி இது. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. இப்போது தயாராக இருக்கும் இந்த பேக்கை உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். திக் பேஸ்டாக அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் வரை இந்த பேக் உங்களுடைய முகத்தில் தாராளமாக இருக்கலாம்.

face6

அதன் பின்பு உங்களுடைய கையை நன்றாக நனைத்து ஈரம் செய்து விட்டு, முகத்தை நனைத்து விட்டு இரண்டு கைகளையும் முகத்தில் வைத்து, நன்றாக ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்து, முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டாலே போதும். இந்த பேக் மீதமிருந்தால் அதை வீணாக்க வேண்டாம். ஃப்ரீஸரில் ஐஸ் க்யூப் டிரைவில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

தேவைப்படும்போது அந்த ஐஸ் க்யூபை எடுத்து முகத்தில் மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறும். தேவைப்பட்டால் இந்த பேக்கை கொஞ்சம் அதிகமாக அரைத்து உடல் முழுவதும் தடவி ஸ்கரப் செய்து மசாஜ் செய்தாலும் உங்களுடைய தோலின் நிறம் வெள்ளையாக மாறும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வர வர சருமம் இயற்கையாகவே ஒரு பொலிவை பெறும்.

face2

ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போட்டுக் கொள்ளலாம். முடிந்த வரை வெயில் தாழ்ந்த பின்பு இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் அப்ளை செய்து கொள்வது நல்லது. இந்த லாக்டவுன் காலத்தில், வீட்டில் இருந்தபடியே வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை வைத்து உங்களுடைய அழகை மேலும் அழகு படுத்திக் கொள்ள இது ஒரு சிம்பிள் டிப்ஸ். உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணிக்கோங்க.

- Advertisement -