அருமையான காலிஃப்ளவர் கிரேவி 3 விசிலில் எப்படி தயார் செய்வது? சூடான சாதத்துடனும், வெரைட்டி டிபன் வகைகளுடனும் தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்குமே!

cauliflower-gravy_tamil
- Advertisement -

மணக்க மணக்க காலிஃப்ளவர் கிரேவி இப்படி செய்து கொடுத்தால் எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தவே பத்தாது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சூடான சாதம் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொள்ள சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த காலிஃப்ளவர் கிரேவி ரெசிபி செய்வது சுலபம் தான். அதை எப்படி அருமையாக தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் – ஒன்று, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி – சிறிதளவு. வறுத்து அரைக்க: சமையல் எண்ணெய் – 1 ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அண்ணாச்சி மொக்கு – தலா 2, சோம்பு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம் – இரண்டு, தக்காளி – இரண்டு.

- Advertisement -

செய்முறை 

காலிபிளவர் கிரேவி செய்வதற்கு முதலில் காலிஃப்ளவரை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். சிறு சிறு பூக்களாக வெட்டி பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் இவற்றை சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு சூடேற்றுங்கள். தண்ணீர் சூடானதும் அடுப்பை அணைத்து ஒரு வடிகட்டியில் இவற்றை போட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் காலிஃப்ளவரில் இருக்கும் நுண் புழுக்கள் வெளியேறும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அண்ணாச்சி மொக்கு, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை வரிசையாக ஒவ்வொன்றாக போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ரெண்டு பெரிய வெங்காயத்தை நான்கைந்தாக வெட்டி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்குங்கள். பின் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மசிய வதங்க விடுங்கள். இவை மசிந்து வதங்கி வந்த பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு, அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மரவள்ளிக் கிழங்கு இருந்தா ஒரு முறை இப்படி அடை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. காலை உணவு ஹெல்தியா சாப்பிடனும் நினைக்கிறவங்க இப்படி தான் சாப்பிடணும். ரொம்பவே கிரிஸ்பியான டேஸ்டியான அடை ரெசிபி.

இவற்றின் பச்சை வாசம் போனதும் சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை இதனுடன் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடுங்கள். தேவையான அளவிற்கு கொஞ்சம் போல தண்ணீர் விட்டு கெட்டியாக கிரேவி போல குக்கரை மூடி போட்டு மூன்று விசில் விட்டு எடுத்து நறுக்கிய மல்லி தழை தூவி சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொண்டு சாப்பிடுங்கள், அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -