உங்கள் வீடு, சொத்துகள் பாதுகாப்பாக இருக்க இம்மந்திரம் துதியுங்கள்

chandikeswarar

இறைவன் ஒன்று தான் என்றாலும் நமது இந்து மதத்தில் இறைவனை பல்வேறு வடிவங்களில் வழிபடுவது பல்வேறு நன்மைகளை பெறுவதற்காகத்தான். நம்மில் பலருக்கும் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பொருட்களை தொலைந்து போகாமலும், களவாட படாமலும் பாதுகாப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. நம்மை அனைத்து வித துன்பங்களிலிருந்தும் காப்பவர்களாக காவல் தெய்வங்கள் பலர் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் சிவபெருமான் கோவிலில் வீற்றிருக்கும் சண்டிகேஸ்வரர். அந்த சண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இதோ.

chandikeshwara

சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்

ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
ஸிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும் போது சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் வீட்டில் இருக்கும் பொருட்கள் திருடர்களால் களவாடப் படாமல் தடுக்கும்.

chandikeshwara

விசாரசருமன் என்கிற தீவிர சிவ பக்தன் முற்காலத்தில் வாழ்ந்து வந்தான். தனது சிவபக்திக்கு இடையூறு ஏற்படுத்திய தன் தந்தையையே தாக்கியதால், அவன் பக்திக்கு மனம் குளிர்ந்து அவன் முன்பு தோன்றிய சிவபெருமான் மற்றும் பார்வதி, சிவகணங்களை நிர்வகிக்கும் சண்டிகேச பதவியை தந்தருளினார். அத்தகைய அதிதீவிரமான சிவதொண்டனாக மாறிய சண்டிகேஸ்வரரை வணங்குவதால் நமக்கு நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு, நிலம் அமைய மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandikeswarar gayatri mantra in Tamil. It is also called as Gayatri mantras in Tamil or Chandikeshwara mantra in Tamil or Mana uruthi pera in Tamil or Thirudu povadhai thadukkum manthiram in Tamil.