26-05-2021 அன்று நடக்கவிருக்கும் ரத்த சந்திர கிரகணத்தின் போது, பாதிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார்?

chandra-graham

பிலவ வருடம் வைகாசி மாதம் 12ஆம் தேதி இந்த முழு சந்திரகிரகணம் நடக்கவிருக்கிறது. அதாவது வருகின்ற 26-05-2021 நாள் ரத்த சந்திர கிரகணம் இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் தெரியப் போகின்றது. சந்திரகிரகணம் நிகழப்போகும் நேரம் என்ன. குறிப்பாக இந்த சந்திர கிரகணத்தின் மூலம் பாதிக்கக்கூடிய ராசிகள் எவை. பாதிக்கப்போகும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன. சந்திர கிரகத்தின் போது என்ன செய்யலாம். என்ன செய்யக்கூடாது, என்பதை பற்றிய விரிவான சில தகவல்களைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

chandra-graham1

தமிழ்நாட்டை பொருத்தவரையில் இந்தச் சந்திரகிரகணம் ஒரு நிழல் கிரகணமாக தான் காணப்படுகின்றது. இந்தியாவில் எல்லா இடங்களிலும் இந்த சந்திர கிரகணத்தை காண முடியாது. அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், இந்த இடங்களில் இந்த சந்திர கிரகணத்தை மக்கள் காணலாம். சந்திர கிரகணம் தெரியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தோஷம் இல்லை என்றுதான் சொல்லப்படுகின்றது.

இந்தச் சந்திரகிரகணம் 26-5-2021 ஆம் நாள் மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை நிகழவிருக்கிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் இந்த சந்திரகிரகணம் தெரியாது என்றாலும், முடிந்த வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதுதான் நல்லது. அனைத்து இடங்களிலும் லாக்டவுன் சூழ்நிலை நிலவி வருவதால், மக்கள் பெரும்பாலும் வெளியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும் வெளியே செல்லக் கூடிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்திலும், கிரகணம் ஏற்படக்கூடிய இந்த நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

chandra-graham2

அதிலும் குறிப்பாக இந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமும் ஆரஞ்சு நிறமும் சேர்ந்த வண்ணத்தில் காணப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த சந்திரகிரகணத்தை ரத்த சந்திரகிரகணம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்திர கிரகணத்தின் போது யாரும் கோபப்படாமல் அமைதியாக இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், முடிந்த வரை யாருமே கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சந்திர கிரகணத்தின் போது குறிப்பாக பாதிக்கப்படப்போவது அனுசம் நட்சத்திரத்தில் இருக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரர்கள், ரிஷப ராசிக்காரர்கள் தான். குறிப்பாக சொல்லப்போனால் விருச்சக ராசிகாரர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டாயமாக கோபப்பட்டு யாரிடமும் சண்டை போடவே கூடாது. அது உங்களுக்கு பாதகமான பலன்களை கொடுத்துவிடும். விருச்சிக ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தின் போது அமைதி காப்பது மிக மிக நல்லது.

chandra-graham3

விருச்சிக ராசிக்காரர்கள், ரிஷப ராசிக்காரர்கள் இந்த கிரகண நேரத்தில் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? பூஜை அறையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்வது நன்மையை தரும். முழுமையாக இறைவழிபாட்டில் ஈடுபட்டு உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை உச்சரித்து இறைவனை வழிபடுவது நன்மை தரும். முடிந்தால் தர்ப்பைப்புல் அருகம்புல் இந்த பொருட்களை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு தியானம் செய்வது நல்லது.

viruchigam

கிரகன் சமயத்தின் போது கண்ணுக்குத் தெரியாத கிருமிகளின் பாதிப்பு பூமியில் இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் சாப்பிடுவது அவ்வளவு சரியாக இருக்காது. இது காலகாலமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்ததுதான். முடிந்தவரை இந்த கிரகண நேரத்தில் உணவு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இந்த சமயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சமைத்த உணவு பண்டங்களை சாப்பிடாமல் பழவகைகள் ஜூஸ் போன்ற பொருட்களை சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு நன்மையைத் தரும்.

rishabam-rasi

இன்றைக்கு நம்நாடு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் கிரகமும் சேர்ந்து வருகின்றது. இதன் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்று அந்த ஆண்டவனை கிரகண நேரத்தின் போது பிரார்த்தனை செய்து, கிரக நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.