நீங்கள் வெளிநாடு செல்ல, யோகமான வாழ்க்கை அமைய இவற்றை செய்யுங்கள்

chandran

நவக்கிரகங்களுக்கு சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாக வருகின்றவர் சந்திர பகவானாவார். சந்திர பகவான் வளர்பிறை காலத்தில் சுபராகவும், தேய்பிறை காலத்தில் பாபராகவும் இருக்கிறார். சந்திர பகவான் சுப கிரகங்களுக்கு நட்பு கிரகமாக இருப்பதால் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் பல நன்மைகள் உண்டாகும். அப்படியான ஜாதக அமைப்பு இல்லாதவர்களும் சந்திர பகவானால் நன்மைகள் பெற செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astrology

சந்திரபகவான் ஒரு ஜாதகரின் மனம், கற்பனைத்திறன், கலைகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம், விவசாயத் தொழில், கடல் சார்ந்த வியாபாரங்கள், வெளிநாடு செல்லும் யோகம், தானிய லாபம் ஆகியவற்றுக்கு காரகத்துவம் கொண்ட கிரகமாக இருக்கிறார்.

ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் இருப்பதும், உச்ச வீடான ரிஷபத்தில் இருப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பாகும். மேலும் சந்திர பகவானுக்கு நட்பு கிரகமான குரு பகவான் உச்ச ராசியான சந்திரனுகுரிய கடக ராசியில் இருப்பது மிகச் சிறப்பான யோகத்தை ஏற்படுத்தும் ஜாதக அமைப்பு என ஜோதிடர்களால் கருதப்படுகிறது.

Lord-Chandra

கடக ராசியில் வளர்பிறை சந்திரன் இருக்கப் பிறந்த ஜாதகர் மிகுந்த அறிவாற்றல் உடையவராகவும், உலக அறிவும், விஷய ஞானம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நேர்மையான குணமும், செயல்பாடும் இருக்கும். வெளிநாடுகளுக்கு சென்று தொழில், வியாபாரம் மூலம் பெரும் செல்வம் ஈட்டுவார்கள். மக்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் அதிகம் உள்ளவர்கள். கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்த பலர் அரசியல் தலைவர்களாக உயர்ந்திருக்கின்றனர்.

- Advertisement -

ஜாதகத்தில் சந்திர பகவான் உச்சம் அடையும் ராசியான ரிஷப ராசியில் சந்திரன் இருக்க பிறந்தவர்கள் செல்வ வளம் மிகுந்த வாழ்க்கை அமையப் பெறுவார்கள். பிறரை வசீகரிக்கும் முக அமைப்பும், உடல் தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு அதிகமிருக்கும். அழகான வாழ்க்கைத் துணை, வசதியான வீடு, ஆடம்பரமான வாகனம் போன்ற யோகங்கள் பெற்று இன்பமாக வாழ்வார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் உச்சம் அடையும் ராசியான கடகத்தில் குரு கிரகம் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் அரசுத் துறைகளில் மிக உயரிய பதவிகளை பெறுவார். மக்கள் வசீகரம், செல்வாக்கு உண்டாகும். பல கலைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பார். கடல் சார்ந்த தொழில், வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் ஏற்படும். கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் பெரும் பாக்கியமும் இத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு உண்டு.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் மேற்கூறிய நிலையில் இல்லாவிட்டாலும் அல்லது பாதகமான அமைப்பை பெற்றிருந்தாலும் பௌர்ணமி மற்றும் உங்களின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று தஞ்சை மாவட்டத்தில் சந்திர பகவானுக்குரிய திங்களூர் கோயில் மற்றும் சந்திர பகவான் ஆதிக்கம் நிறைந்த தலமாக இருக்கும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில்களுக்கு சென்று வழிபடுவதால் சந்திர பகவானால் யோகமான பலன்கள் ஏற்படும். திங்கட்கிழமைகளில் சிவபெருமான் கோயிலில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வருவதும் ஜாதகத்தில் சந்திரனின் பாதகமான அமைப்பால் ஏற்படும் துர்பலன்கள் நீங்கி வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
வசதியான வாழ்க்கை ஏற்பட இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandran graha palan in Tamil. It is also called as Chandra bhagavan in Tamil or Jathagam yogam in Tamil or Chandran palangal in Tamil or Chandran jathaga palangal in Tamil.