உங்கள் தினசரி பழக்கவழக்கத்தை இனி இப்படி மாற்றிக் கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

prayer

ஒரு நாள் முழுவதுமான பொழுது நமக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும். ஒரு நாளை இனிய நாளாக கழிப்பதும், சங்கடங்கள் நிறைந்த நாளாக கழிப்பதும் நம் கையில்தான் உள்ளது. நம்மை விட்டு கடந்து சென்ற ஒரு தினத்தை, நம்மால் திரும்பவும் பெற முடியாது. ‘நேற்றைய நாளை வீணாக்கி விட்டோமே’ என்று ஒருநாள்கூட சிந்தித்து வருத்தப்படக்கூடாத அளவிற்குத்தான் நாம் ஒரு பொழுதை கழிக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு நாளும் இனிமையான நாளாக மாற்றிக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கம்  என்பது ஆன்மீக ரீதியாகவும் இருக்கவேண்டும். ஆரோக்கிய ரீதியாகவும் இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

sleep1

முதலில் நாம் காலையில் எந்திரிக்கும் நேரம் என்பது 5 மணியிலிருந்து 6 மணிக்குள் இருக்க வேண்டும். 6 மணிக்கு முன்பாக எப்பொழுது வேண்டுமானாலும் முழித்துக் கொள்ளலாம். ஆனால் 6 மணிக்கு பிறகு ஒரு நிமிடம் கூட தூங்கக் கூடாது. சிலருக்கு இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் பழகிக்கொண்டால் சுலபமாகிவிடும்.

இந்தக் காலகட்டத்தில் எல்லாம் பலபேர் எழுந்தவுடன், விழிப்பது செல்போனில் தான். இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால் இனி இதை தவிர்த்து விடுங்கள். உங்கள் செல்போனில் எதிர்மறையாக எதையாவது படித்து விட்டால் அந்த நாள் முழுவதுமே வீணாகிவிடும். கண்விழித்ததும் சுவாமி படங்களையோ அல்லது உங்களுக்கும் மனதிற்கு இனிமையாக இருக்கக்கூடிய எந்த காட்சியாக இருந்தாலும் அந்த படத்தின் முன் கண் விழிப்பது, அந்த நாள் முழுவதும் உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சிலருக்கு பல் தேய்க்காமல் காபி டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் அது உங்களுக்கு உங்களின் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். பல் தேய்த்து முடித்து விட்டு வெறும் வயிறோடு இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. முடிந்தவரை ஒரு டம்ளர் தண்ணீராவது பருக வேண்டும். அந்தக் காலத்தில் நீராகாரம் என்று கூறப்படும் பழைய சாதத்தில் இருக்கும் தண்ணீரை குடிப்பார்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

bathing

அடுத்ததாக குளியல். குளியலில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் சில உள்ளது. முதலில் குளிர்ந்த நீரில் தான் நாம் குளிக்க பழக வேண்டும். இரண்டாவதாக முதலில் கால், இடுப்பு பகுதி, தலைப்பகுதி என்று படிப்படியாக தண்ணீரை ஊற்றுவது நல்லது .இப்படி செய்தால் தான் நம் உடலில் இருக்கும் உஷ்ணமானது, உடல் துவாரங்களின் வழியே சீராக வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் எடுத்தவுடன் ஷவர் திறந்தால் தண்ணீர் தலையில்தான் கொட்டுகிறது. இது மிகவும் தவறான பழக்கம். நம் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.

- Advertisement -

முந்தைய காலகட்டங்களில் குளத்தில் நீராடுபவர்கள் முதலில் கால் பகுதியை வைத்து பின்பு இடுப்பு பகுதியை அடைந்து அதன் பின்புதான் முழுமையாக தலை முழுகுவார்கள். நம் குலத்தை தேடி போக வேண்டிய அவசியமில்லை. குளியலறையில் குளித்தாலும், முறைப்படி குளிக்க வேண்டும் என்பது அவசியம். குளித்து முடித்த உடன் முகத்தை கதுடைப்பதற்கு முன்பு முதுகுப் பகுதியை துடைப்பது லக்ஷ்மி கலாட்சம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இதையும் பின்பற்றி கொள்ளுங்கள்.

praying

குளித்தவுடன் இறைவனை வழிபாடு செய்த பின்பு, காலை உணவு அருந்தும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். காலை உணவை மிகவும் சூடாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதற்கு இடைப்பட்ட சமயத்தில் நல்ல சுவாமி பாடல்களாக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் மனதிற்கு பிடித்தமான பாடல்களாக இருந்தாலும் சரி அதை ஒலிக்கச் செய்து காதில் கேட்டு உங்களது மனதினை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு முதல் படியே இதுதான். உங்களுடைய மனது எப்பவும் உற்சாக நிலையிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் அதில் வெற்றி அடைய முடியும். உங்கள் மனதை உற்சாகப்படுத்தும் சக்தியானது நல்ல இசையில் உள்ளது. ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன்.

இதேபோல் வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் என்பது நம் ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியம். நம்மில் பலர் இதை மறந்து பல வருடம் ஆகிவிட்டது அல்லவா? நோய்கள் ஏன் வராது? உடல் ஆரோக்கியம் கெட்டால் உழைப்பு கெடும். உழைப்பு கெட்டால் வருமானமும் கெடும். அதிர்ஷ்டம் நம்மை விட்டு தூரம் செல்லத் தான் செய்யும்.

blessings aasirvadham

வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி செல்ல வேண்டும் என்று கூறுவார்கள். உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் ‘போய் வருகிறேன்’ என்ற ஒரு வார்த்தையாவது சொல்லி விட்டு கிளம்புங்கள். வீட்டில் உள்ளவர்களிடம் நீங்கள் சொல்லப்படும் இந்த ஒரு வார்த்தையை உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கும். இப்படிப்பட்ட பழக்கத்தைத் தொடர்ந்து நீங்கள் செய்து வந்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் எந்த குறைபாடும் இருக்காது. வெற்றிக்கும் எந்த ஒரு குறைபாடும் இருக்காது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். பழகிய பின்பு மேற்கண்ட வழிமுறைகளை நீங்கள் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வீர்கள்.

இதையும் படிக்கலாமே
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவில் வரலாறு

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Change your routine quotes in Tamil. Change your daily activities in Tamil. Adhirstam Tamil. How to get luck in life in Tamil.