பிறந்த தேதிப்படி எந்த விலங்கின் குணங்கள் உங்களுக்கு இருக்கும் தெரியுமா?

astrology-1

இந்தியாவில் உள்ள ஜோதிடத்தின் மூலமாக நாம் பல்வேறு பலன்களை இதுவரை தெரிந்துகொண்டதுண்டு. இந்தியாவை போல் அமெரிக்காவிலும் ஜோதிடக்கலை உள்ளது. அதன் படி ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் பிறந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட விலங்கின் குணாதிசியங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் உங்களது பிறந்த தேதியின் மூலம் உங்களுக்கு எந்த விலங்கின் குணாதிசயம் இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

நீர்க்கீரி (Otter)

Otter

ஜனவரி 20 – பிப்ரவரி 30 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் நீர்க்கீரி என்னும் விலங்கின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த விலங்கு எந்த ஒரு விஷயத்தையும் வித்யாசமாக அணுகும் திறன் கொண்டது.  அதனால் இந்த தேதிகளுக்குள் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சாதாரண வழியில் மிகவும் எளிதாக செய்து முடிப்பார்கள்.

ஓநாய் (Wolf)

wolf

- Advertisement -

பிப்ரவரி 19 – மார்ச் 20 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் ஓநாயின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த மிருகம் எப்போதும் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நினைக்ககூடியாது. அதனால் இந்த தேதிகளுக்குள் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் தனிமையை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.

ராஜாளிப்பறவை (Falcon)

Falcon

மார்ச் 21 – ஏப்ரல் 19 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் ராஜாளிப்பறவையின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பறவை எப்போதும் தலைமையை விரும்பும் குணம் கொண்டது. அதனால் இந்த தேதிக்குள் பிறந்தவர்கள்
தலைமைத்துவ பண்பைக் கொடவர்களாக இருப்பார்கள். அதோடு ஆணவமும் கர்வமும் இவர்களுக்கு இருக்கும். இவர்களுக்கு சரியான ஆதரவாக யாரவது இருந்தால் போதும் இவர்கள் வெற்றியை குவிப்பார்கள்.

நீர்நாய் (Beaver)

Beaver

ஏப்ரல் 20 – மே 20 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் நீர்நாய் என்னும் விலங்கின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த மிருகம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் குணம் கொண்டது. ஆகையால் இந்த தேதிக்குள் பிறந்தவர்கள் எந்த ஒரு வேலையும் சீக்கிரம் முடிக்கக்கூடியவர்கள். அதோடு இவர்கள் வணிகம் புரிவதிலும் சிறந்தவர்கள்.

மான் (Deer)

Deer

மே 21 – ஜூன் 20 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் மானின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். மான்கள் எப்போதும் வெளியில் சுற்றி திரிபவை. ஆகையால் இந்த தேதிக்குள் பிறந்தவர்கள் எப்போதும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் நன்கு உரையாடும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மரங்கொத்தி (Woodpecker)

Woodpecker

ஜூன் 21 – ஜூலை 21 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் மரக்கொத்தியின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். மரங்கொத்தி மிகவும் சாந்தகுணம் கொண்டது. ஆகையால் இந்த தேதிக்குள் பிறந்தவர்கள் மிகவும் சாந்தமாக இருப்பார்கள் அதோடு இவர்கள் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சற்றும் பொறாமையும் இருக்கும்.

சால்மன் (Salmon)

Salmon

ஜூலை 22 – ஆகஸ்ட் 21 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் சால்மன் என்னும் மீனின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் நேர்மறை ஆற்றல் அதிமாக இருக்கும். அதேபோல் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை தானாக முன்வந்து செய்வார்கள்.

கரடி (Bear)

Bear

ஆகஸ்ட் 22 – செப்டம்பர் 21 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் கரடியின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை சொன்னான் அதை புரிந்துகொள்ளும் குணம் கொண்டது கரடி. ஆகையால் இந்த தேதிக்குள் பிறந்தவர்கள் எதையும் எளிதாக புரிந்துகொள்வார்கள். அதோடு எந்த ஒரு விஷயத்தையும் நடைமுறை அணுகுமுறையுடன் மேற்கொள்வார்கள்

அண்டங்காக்கை (Raven)

Raven

செப்டம்பர் 22 – அக்டோபர் 22 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் அண்டங்காக்கையின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த தேதிக்குள் பிறந்தவர்கள் தன்னுடன் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதோடு இவர்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

பாம்பு (Snake)

Snake

அக்டோபர் 23 – நவம்பர் 22 வரையிலான தேதிகளுக்குள் பிறந்தவர்கள் பாம்பின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். பாம்பை நாம் சீண்டினால் அது நம்மை சீண்டும். அதே போல இந்த தேதிக்குள் பிறந்தவர்களை யாரவது சீண்டினால் அவர்களை இவர்கள் அச்சுறுத்துவிடுவார்கள். இவர்கள் அரச இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருப்பார்கள்.

ஆந்தை (Owl)

Owl

நவம்பர் 23 – டிசம்பர் 21 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் ஆந்தையின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெளியே நன்கு சுற்ற விரும்புவார்கள் மற்றும் கூர்மையான கேட்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இந்த தினங்களில் பிறந்தவர்கள், தனது இனிமையான பேச்சால் பலரை கவர்வதோடு, பல நண்பர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வார்கள்.

வாத்து(Duck)

Duck

டிசம்பர் 22 – ஜனவரி 19 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் வாத்தின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிலும் விடாமுயற்சி மற்றும் உறுதியுடன் இருப்பார்கள். இந்த தினங்களில் பிறந்தவர்கள் தனது நோக்கத்தில் குறியாக இருப்பார்கள்.