பயம், தயக்கம், குற்றவுணர்வு ஆகிய மூன்றும் நீங்க சரம ஸ்லோகம்

Thumbnail-compressed
- Advertisement -

மனித வாழ்க்கையில் எப்போதும் பல வகையாக எண்ணங்கள் மட்டும் உணர்வுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. அத்தகைய எண்ணங்கள், உணர்வுகளில் பிரதானமானது பயம், தயக்கம், குற்றவுணர்வு போன்றவையாகும். இந்த மூன்றும் ஒரு மனிதனை மனதளவில் துன்புறுத்தக்கூடியதாகும். வாழ்வில் பலருக்கும் பல நேரங்களில் பல விடயங்கள் குறித்தும் பயம், தயக்கம், குற்றவுணர்வு ஏற்படுவதோடு கவலைகளும் அதிகரிக்கின்றன. மனபாரங்களும் கூடுகிறது. இத்தகைய சமயங்களில் இறைவன் தான் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல். மேலே கூறப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் சரம ஸ்லோகம் இதோ.

சரம ஸ்லோகம்

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச

- Advertisement -

பரமாத்மாவாக இருக்கும் “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா” கீதோபதேசத்தில் அர்ஜுனனுக்கு கூறிய ஸ்லோகம் தான் “சரம ஸ்லோகம்”. இந்த ஸ்லோகத்தை எப்போதும் எந்நேரத்திலும் துதிக்கலாம் என்றாலும் மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதி தினத்தன்று அதிகாலை அல்லது அந்தி சாயும் மாலைவேளையில் வீட்டின் பூஜையறையிலோ அல்லது கிருஷ்ணன் கோவிலிலோ தியானத்தில் அமர்ந்து, இந்த மந்திரத்தை வாயால் உச்சரித்தோ அல்லது மௌனமாகவோ ஜெபித்து வந்தால் தேவைற்ற பயங்கள், தயக்கங்கள், குற்றவுணர்வுகள், கவலைகள் நீங்கும். உங்கள் மனதில் இருக்கும் நீங்கும் மனபாரங்கள் குறையும். வாழ்க்கையில் எதற்கும் அஞ்சாத மனோதிடம் கிடைக்கும். இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைய முடியும்.

Shri-Krishna

“ஒவ்வொரு உயிரிலும் இருப்பது நானே உயிர்கள் அனைத்தும் எனது பிம்பங்களே” என்று குருச்சேத்திர யுத்தத்தின் போது அர்ஜுனனுக்கு கீதோபதேசத்தில் ஜீவாத்மா – பரமாத்மா தத்துவத்தை விளக்குகிறார். அப்போது இந்த சரம ஸ்லோகத்தை அர்ஜுனனுக்கு மந்திரோபதேசம் செய்தார் பகவான் கண்ணன். அன்றாட மனித வாழ்வில் நாமும் பல தரப்பட்ட சூழலை எதிர்கொள்கிறோம். அப்போது சில சமயங்களில் நமது மனோதிடத்தை இழந்து விடுகிறோம். அத்தகைய சூழல்களில் கிருஷ்ணரின் இந்த சரம ஸ்லோகத்தை படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
நன்மைகள் பல அளிக்கும் அம்பாள் துதி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Charama slokam in Tamil. It is also called as Charama slokam lyrics in Tamil or Charama slogam in Tamil.

- Advertisement -