நிலை வாசலுக்கு முன்பு இந்த செடிகளை இப்படி வளர்த்தால், உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் உங்களை விட்டு போகவே போகாது. வீட்டில் தரித்திரம் தான் பிடிக்கும்.

money-plante

நம்முடைய வீட்டுவாசலில் செடிகளை வளர்ப்பது என்பது அழகிற்காக மட்டும் அல்ல. பசுமை நிறைந்த செடி கொடிகள் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுக்கும், ஆன்மிக ரீதியாகவும் பல நன்மைகளை கொடுக்கும். அந்த வரிசையில் எந்தெந்த செடிகளை நம்முடைய வீட்டில் எப்படி வளர்த்து வந்தால், தெய்வங்களின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெறமுடியும் என்பதை பற்றியும், எந்த செடிகொடிகளை எப்படி வைத்தால், நம் வீட்டில் கஷ்டம் உண்டாகும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆன்மீக ரீதியாக நம்பிக்கை உள்ளவர்கள் இதைப் படித்து பயன்பெறலாம்.

money-plant

முதலில் எந்த செடியை நிலை வாசப்படியில் இப்படியாக வைக்கக் கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாகவே நிறைய வீடுகளில் மணிபிளான்ட் செடியை நில வாசல் படிக்கு நேராக, நுழைவாசலில் இருக்கும் இரும்பு கேட்டிலேயே சுற்றிவளைத்து வளர்த்து வருவார்கள். ஆன்மீக ரீதியாக இது தவறு என்று சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால் கொடி என்பது கயறு ரூபத்தில் இருப்பது. கயறு ரூபத்தில் இருப்பது எல்லாமே கேதுவின் அம்சம் பொருந்தியது என்ற கருத்து ஜோதிடரீதியாக உண்டு. இந்த கேதுவின் ரூபத்தில் இருக்கும் கொடியை எப்போதுமே நிலை வாசல் கதவில் வைக்கக்கூடாது.

நிறைய பேருடைய வீட்டில் ஜாதி மல்லி கொடியை வாசலில் வைத்து வளர்ப்பார்கள். ஆனால் அந்த செடி எந்த வீட்டிலும் நிலை வாசலுக்கு நேராக இருக்காது. நிலை வாசலுக்கு பக்கவாட்டில் தான் அந்தக் கொடி வளர்க்கப்பட்டு இருக்கும். உங்களுடைய வீட்டிலும் இனி கொடி வகையை நிலை வாசலுக்கு நேராக வளர்க்காதீர்கள். நிலை வாசலுக்கு பக்கவாட்டில் வைத்துக் கொள்ளலாம். நேராக நிலை வாசல் முன்பு கொடியை சுற்றி விடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

mantharai

அடுத்தபடியாக வீட்டின் தென்மேற்கு பகுதியில் இடம் இருந்தால் அந்த இடத்தில் மந்தாரை பூச்செடி, பவளமல்லி செடியை வளர்த்து வரலாம். முடிந்தால் அந்த இடத்தில் ஜாதிமல்லி செடியை வளர்ப்பதும் மிகவும் நல்லது. வாசனை மிகுந்த இந்த பூக்களை தென்மேற்கு பகுதிகளில் வைத்து வளர்த்து வந்தால் நம்முடைய வீட்டிற்கு தெய்வசக்தி விரும்பி வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முன்னோர்களின் ஆசீர்வாதமும் நம் வீட்டிற்கு முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

பொதுவாகவே இந்த பவள மல்லிக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த பவளமல்லி சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு தான் செடிகளில் பூக்கத் தொடங்கும். சூரிய உதயத்தின் போது இது செடிகளிலிருந்து உதிர்ந்துவிடும். எந்த ஒரு பூவையும் நாம் செடியிலிருந்து பறித்து இறைவனுக்குச் சூட்டலாம். இந்த பவளமல்லியை மட்டும் செடியிலிருந்து பறிக்கக்கூடாது. கீழே உதிர்ந்த பூக்களை எடுத்து இறைவனுக்கு சூட்டலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

pavala-malli

உங்கள் வீட்டில் மந்தாரைப்பூ செடியை வைத்து வளர்த்து, அந்த பூக்களை பறித்து இறைவனுக்கு சூட்டி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஜாதிமல்லி பூ இயற்கையாகவே வாசம் நிறைந்தது.

pavala-malli1

இந்த வாசத்திற்கு மயங்காத எந்த இறைவனும் இருக்க முடியாது. இதை பறித்து உங்கள் கைகளாலேயே தொடுத்து வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இறைவனுக்கு சூட்டினால் நிச்சயமாக அந்த வேண்டுதல் இறைவனின் செவிகளில் விழும். பூக்களை தொடுக்க தெரியாதவர்கள் உதிரி புஷ்பங்களை இறைவனின் பாதங்களில் சமர்ப்பணம் செய்து விடுங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.