உங்களுடைய செருப்பு தொலைந்து போய் இருக்கிறதா? செருப்பு தொலைந்து போனால் நல்லதா? கெட்டதா?

- Advertisement -

செருப்பை தொலைத்த அனுபவம் நம்மில் பலபேருக்கு இருக்கும். கோவில், திருமண மண்டபம், இப்படி கூட்டம் சேரும் இடத்தில் செருப்பை வெளியே விட்டு விட்டு சென்றால், செருப்பு மாறி போவதற்கும் வாய்ப்பு உள்ளது. செருப்பு தொலைந்து போவதற்கும் வாய்ப்பு உள்ளது. நம்முடைய செருப்பு தொலைந்து போனால் சாஸ்திரப்படி நமக்கு என்ன நடக்கும்? செருப்பு தொலைந்தால் நமக்கு அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? செருப்பு தொலைந்த பின், நாம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

seruppu

பொதுவாகவே நம்முடைய பாதங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு கூற்று உள்ளது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், நம்முடைய பாதங்களில் மகாலட்சுமியுடன் சேர்ந்து, மஹாவிஷ்ணுவும் வாசம் செய்வதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான், நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில், நம்முடைய செருப்பையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள்.

- Advertisement -

செருப்பை கழட்டி விடும் போது, இரண்டு செருப்பையும் ஒன்றாக விடவேண்டும். செருப்பு தூரம் போய் விழும் அளவிற்கு, எக்காரணத்தைக் கொண்டும் செருப்பை, காலில் இருந்து கழட்டி எடுத்து விசக் கூடாது, என்று குழந்தைகளுக்கு சொல்லித் தருவார்கள். நீங்கள் உங்களுடைய செருப்பை கழட்டி விட்டால் கூட, இரண்டு செருப்பையும் நேராக அழகாக, ஒன்றாக கழட்டிவிட பழகிக்கொள்ளுங்கள். அது உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை தேடி தரும்.

seruppu

நம் முன்னோர்கள், நம்முடைய செருப்பை கழட்டி, யாரையும் அடிக்க கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி அடித்தால், ‘செருப்பால் அடித்தவர், தாழ்ந்த நிலைக்கு சென்று விடுவார் என்றும், செருப்பால் அடி வாங்கியவர், வாழ்க்கையில் முன்னேறி விடுவார்’, என்றும் நம்முடைய முன்னோர்கள் சொல்லி, நாம் கேள்விப்பட்டு இருப்போம் அல்லவா? இதற்கு காரணம், நம் பாதத்தில் வசிக்கும் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் செருப்பின் மூலமாக, நாம் யாரை அடிக்கின்றோமோ, அவர்கள் இடத்தில் சென்று விடுவார்கள், என்பதை குறிப்பதற்காக தான், இப்படி ஒரு கூற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சரி. உங்களுடைய செருப்பை தொலைத்து விட்டீர்கள் என்ன செய்யலாம்? செருப்பு தொலைந்து போனால் உங்களுடைய அதிர்ஷ்டமும் உங்களை விட்டு தொலைந்து போக வாய்ப்பு உள்ளது. அதாவது, நாம் போட்டிருக்கும் செருப்பானது, நம்முடைய பாதங்களுக்கும் மட்டும் பாதுகாப்பு அல்ல. நம் பாதங்களில் வசிக்கும் விஷ்ணு பகவானுக்கும், மகாலட்சுமிக்கும் கூட தான் பாதுகாப்பு.

paatham

நம் பாதங்களில் இருந்து நம்மை காத்துக்கொண்டிருந்த பகவானையும், மஹாலட்சுமியையும் பாதுகாத்து கொண்டிருந்த அந்த செருப்பானது, நம்மை விட்டு சென்று விட்டால்! அந்த செருப்போடு நமது அதிர்ஷ்டமும், நல்ல நேரமும் சென்றுவிட்டது என்று தானே அர்த்தம். ஆகவே, புதிய செருப்பு வாங்குவதற்கு முன்பு, மகாவிஷ்ணு கோவிலுக்கு சென்று, உங்கள் பெயரை சொல்லி, பூ வாங்கிக் கொடுத்து, சிறியதாக அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு சென்று புதிய செருப்பு வாங்கி அணிந்து கொண்டால், எந்த விதமான தோஷமும் உங்களுக்கு இல்லை. உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டம் என்றைக்குமே உங்களிடம் தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vishnu-lakshmi1

யாரையும் கால்கள் எட்டி உதைக்க கூடாது என்று சொல்வதும் இதற்காகத்தான். நம் காலில் இருக்கும் மகாவிஷ்ணுவும் மகாலட் சுமியும் நம்மை விட்டு, நாம் யாரை காலால் எட்டி உதைத்தோமோ, அவர்களிடத்தில் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையும் நம்மிடத்தில் உண்டு.

vishnu-laxmi

நாம் நிறைய குருமார்களின், சமாதிகளில், அவர் அணிந்து கொண்டிருந்த செருப்பை வைத்து வணங்குவதை பார்த்திருப்போம் அல்லவா? அந்த செருப்பு கூட கட்டை செருப்பாக இருக்கும். இதேபோல் பெரிய பெரிய மகான்களின் செருப்பை மட்டும் வைத்துக் கூட சில இடங்களில் வழிபடுவார்கள். இப்போது புரிகிறதா? செருப்புக்கு எதற்காக இத்தனை மகத்துவம் உண்டு என்பது! உங்களது செருப்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -