நேற்று நடந்தது செவ்வாய் பெயர்ச்சி – இதனால் உங்கள் ராசிக்கு என்ன பலன்

chevvai peyarchi

நேற்று (02-05-2018) செவ்வாய் கிரகம் பெயர்ச்சி அடைந்து, சாயகிரகம் மற்றும் ஞானத்திற்கு அதிபதியான கேதுவுடன் இணைந்துள்ளார். ரத்தம், நோய், சகோதர உறவு ,காவல்துறை, ராணுவம், பூமி ஆகியவற்றுக்கு அதிபதி செவ்வாய், எனவே மற்ற கிரகங்களுடன் இவர் சேர்க்கையால் ஏற்படும் பலன்கள் ஜோதிடத்தில் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த பெயர்ச்சியில் செவ்வாய் கேதுவுடன் இணைவதால் 12 ராசிகளுக்கும் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
Mesham Rasiமேஷ ராசிக்கு 10 ஆம் வீட்டில் உங்கள் ராசிக்குரிய அதிபதியான செவ்வாயுடன் கேது இணைந்திருப்பதால் உங்கள் சொத்து விவகாரங்களில் நல்ல தீர்வை காண்பீர்கள்.மேலும் செவ்வாயுடன் கேது இணைந்திருப்பதால் உங்கள் தொழில், வியாபாரங்களில் அதிக லாபங்களை ஈட்டுவீர்கள். புதிய வியாபார, தொழில் ,வேலைவாய்ப்பு முயற்சிகள் வெற்றி பெரும்.மிகுந்த சுறுசுறுப்பு ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasiசெவ்வாயுடன் கேது சேர்ந்து 9 ஆம் இடத்தில் உள்ளதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ராசிக்கி 9 ஆம் இடத்தில் செவ்வாய் உள்ளதால் புதியவர்களால் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு பூமி லாபம் ஏற்படலாம் சிலருக்கு தொழில், வியாபாரம், கல்வி, சுற்றுலா காரணங்களுக்குகாக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். ஆன்மிக பயணங்களும் சிலர் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்:
Mithunam Rasi7 ல் சனியிடன் இருந்த கேது இப்போது 8 ஆம் வீட்டில் சனியுடன் இருப்பதால் மின்சாரம், நெருப்பு போன்ற விஷயங்களை கையாளும்போது எச்சரிக்கையாக இருக்கவும். உடல் நலம் மற்றும் பண விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் குடும்பத்தார் மற்றும் பிறருடன் நிதானமாக பேசவும். தேவையர்த்த பயணங்களால் சிலருக்கு அலைச்சல் உண்டாக வாய்ப்புள்ளது.

கடகம்:
Kadagam Rasiஇதுவரை 6 ஆம் வீட்டிலிருந்த சனியுடன் இருந்த செவ்வாய் பகவான் இப்போது 7 ஆம் வீட்டிற்கு நகர்வதால் உங்கள் ராசிக்கு நம்மை, தீமை கலந்த பலன்களே ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்பமாக நேரத்தை போக்குவீர்கள். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம். செவ்வாய் சனி கூட்டணி உஷ்ண சேர்கையாதலால் காரமான உணவுகளை தவிர்க்கவும்.

சிம்மம்:
simmamராசிக்கு 5 ஆம் வீட்டிலிருந்து 6 ஆம் வீட்டிற்கு செவ்வாய் பெயர்ச்சியாகி உள்ளதால் தொழில், வேலை நிமித்தமாக பயணங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்திலும், வீட்டிலும் வீண் விவாதங்கள் ஏற்படலாம். அரசுத்தேர்வுகள் எழுதுவீர்கள். செவ்வாய் கேதுவுடன் 6 ல் இருப்பதால் வீடு, மனை சொத்து சேர்ப்பீர்கள். தாய்வழி உறவுகளில் மதிப்பு உயரும் அரசாங்கத்தால் லாபமேற்படும். புதிய வீட்டை எப்பாடு பட்டாவது கட்டி முடிப்பீர்கள். நல்ல சிந்தனைகள் உங்கள் மனதில் ஏற்படும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasiஇதுவரை 4 ஆம் வீட்டில் சனியோடு இருந்த செவ்வாய் இப்போது கேதுவுடன் சேர்ந்து உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டில் இருப்பதால் கருவுற்றிருக்கும் பெண்கள் அனைத்திலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சகோதர உறவுகளுக்கு திருமணம் நடக்கும். அடிக்கடி பயணம் செல்ல நேரிடும். உங்கள் குலதெய்வ கோயிலுக்கும் சென்று வருவீர்கள். சொத்து விவகாரங்களிலும், குழந்தைகள் உடல் நலத்திலும் அக்கறை கொள்ளுங்கள்.

துலாம்:
Thulam Rasi4 ஆம் வீட்டிற்கு நகர்ந்துள்ள செவ்வாய்யால் உங்களுக்கு நன்மையே நிகழும். உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் அதிக லாபமேற்படும். கேதுவுடன் செவ்வாய் 4 ஆம் வீட்டில் நிற்பதால் தாய்வழியில் மருத்துவ செலவு ஏற்படும். உருவுகளுக்குள்ளோ அல்லது நட்பு வட்டத்திலோ சிறு தகராறுகள் ஏற்பட்டு நீங்கும். வீதி புதுப்பித்து காட்டும் வாய்ப்பு ஏற்படும். சோர்வு, தயக்கம் நீங்கி புதிய தன்னம்பிக்கை ஏற்படும்.

விருச்சகம்:
Virichigam Rasiகேதுவுடன் செவ்வாய் 3 ஆம் இடத்தில் இருப்பதால் துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 3 ஆம் வீட்டிலிருப்பதால் சகோதர மற்றும் நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வீடு அல்லது வீட்டுமனை வாங்குவீர்கள், புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பண விஷயங்களில் கவனம் தேவை. பெண்களுக்கு ஓரொளவு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் சற்று கடினமாக முயற்சித்து கல்வி பயில வேண்டும்.

தனுசு:
Dhanusu Rasiஇதுவரை உங்கள் ஜென்ம ராசியில் சனியுடன் இருந்த செவ்வாய் இப்போது கேதுவுடன் 2 ஆம் வீட்டிலிருப்பதால் சகோதர உறவுகளிடம் அனுசரித்து செல்வது நலம். வீண் வம்புகளும், தாய்மாமன் வழி உறவுகளுடன் சிறு உரசல்கல் ஏற்படலாம். ஒரு சிலர்க்கு புதிய ஊர், புதிய வீடு மாறுதல் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல், பணவரவு சரளமாக இருக்கும் முன்கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

மகரம்:
Magaram rasiஉங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டிலிட்டிருந்த செவ்வாய் இப்போது உங்கள் ஜென்ம ராசியில் இருப்பதால் உங்கள் உடல் நலம் பற்றி தேவையற்ற பயங்கள் ஏற்படும். சிறு காயங்கள் ஏற்படலாம். மற்றபடி மிக பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. பணத்தை கையாளுகையில் கவனம் தேவை. வியாபாரிகள் முடிந்தவரை கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. பெண்கள் சமயலறையில் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்:
Kumbam Rasiஉங்கள் ராசிக்கு இது நாள் வரை லாப ஸ்தானத்திலிருந்த செவ்வாய் இப்போது விரய ஸ்தானத்திற்கு சென்றாலும் சுபச்செலவுகள் ஏற்படும். சகோதர உறவுகளால் நன்மை ஏற்படும். வீண்செலவுகளும் ஏற்படும் கவனம் தேவை. இக்காலகட்டத்தில் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வீர்கள். வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.

மீனம்:
Meenam Rasiஉங்கள் ராசிக்கு செவ்வாய் லாபஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் செல்வம் சேரும். அனைவரின் உதவிகளும் கிடைக்கும். பொருட்களின் சேர்மானம் ஏற்படும். உங்களின் ஆளுமை அதிகரிக்கும். குடும்பத்திலும் உறவுகளிலும் உங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படும். சகோதர உறவுகளிடம் பாசம் ஏற்படும். குழந்தைகளின் எதிர் காலத்திற்கு தேவையானதை அனைத்தும் செய்வீர்கள்.