வெறும் 10 கொண்டைக்கடலை இருந்தால் போதும். 10 நிமிடத்தில், 10 வயதை சுலபமாக குறைத்து விடலாம். முகச்சுருக்கத்தை உடனடியாகப் போக்கக்கூடிய ஸ்பெஷல் டிப்ஸ் உங்களுக்காக மட்டும்.

face10

அழகையும் இளமையான தோற்றத்தையும் மிக மிக பத்திரமாக பாதுகாக்க இந்த குறிப்பு எல்லோருக்கும் உபயோகமானதாக இருக்கும். நேரடியாக குறிப்பை பார்த்து விடுவோம். 10 லிருந்து 15 வெள்ளை கொண்டைக்கடலையை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். பத்து மணி நேரம் அப்படியே ஊறட்டும். இரவு நேரத்தில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை கூட நீங்கள் இந்த கொண்டை கடலையை ரெமிடிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

chickpeas2

10 மணிநேரம் ஊறிய அந்த கொண்டைக்கடலையை, அந்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இது ரொம்பவும் மொழுமொழுவென்று அறியாது. 90% தான் மைய அரைத்து இருக்கும். லேசாக கொறகொறப்பு தன்மை இருக்கத்தான் செய்யும். இதை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். (இதை பேஸ்ட் போல் தயார் அரைத்து வைத்துக் கொள்ளக்கூடாது. கொண்டைக்கடலையை ஊற வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி அரைக்கும்போது, கொஞ்சம் பாயசம் பதத்தில் நமக்கு கிடைக்கும்.) இது அப்படியே இருக்கட்டும்.

ஒரு சிறிய பவுளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்து வைத்திருக்கும் கொண்டைக் கடலை –  3 ஸ்பூன், கான்பிளவர் மாவு – 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன் இந்த பொருட்களை சேர்த்து இதை நன்றாக திக் பேஸ்ட்போல் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேக் கொஞ்சம் தண்ணீராக இருந்தால், தேவைப்பட்டால் கொஞ்சம் கான்பிளவர் மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

chickpeas1

இப்போது நமக்கு முகத்தில் அப்ளை செய்யும் அளவிற்கு திக்கான ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும். இதை முகம் முழுவதும் ஃபேஸ்பேக் போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக வாய்ப் பகுதிக்கு பக்கத்தில் இருக்கும் சுருக்கங்கள், கண்களைச் சுற்றியும் இருக்கக்கூடிய சுருக்கங்களில் போட வேண்டும். அந்த இடங்களில் இருக்கக்கூடிய சுருக்கம் வயதானால் ஏற்படக்கூடிய சுருக்கங்கள் தான். சுருக்கங்கள் அனைத்தும் ஒரே நாளில் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய்விடும்.

இந்தப் பேக் உங்களுடைய முகத்தில் 15 நிமிடங்கள் இருந்தால் நன்றாக உலர்ந்துவிடும். அதன் பின்பு உங்களுடைய கைகளை நன்றாக ஈரமாக்கி கொண்டு, முகத்தை லேசாக மசாஜ் செய்தபடி முகத்தில் இருக்கும் ஃபேஸ் பேக்கை ஸ்க்ரப் செய்து குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இப்படியாக வாரத்தில் இரண்டு நாட்கள் செய்தாலே உங்களுடைய முகத்தில் இருக்கும் சுருக்கம் படிப்படியாக குறைந்துவிடும். மீண்டும் மீண்டும் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும் செய்யும்.

chickpeas2

இந்த குறிப்பிற்கு கட்டாயமாக வெள்ளை கொண்டைக்கடலையை தான் பயன்படுத்த வேண்டும். ஃபிரிட்ஜில் அரைத்த கொண்டக்கடலையை பாட்டிலில் ஊற்றி வைத்து இருக்கின்றோம்  அல்லவா அது, ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். ஜப்பானியர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தித்தான் தங்களுடைய சருமத்தை பளபளப்பாக சுருக்கமில்லாமல் வைத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. விடவே மாட்டீங்க.