- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுழந்தைகள் ஒழுக்கத்தையும் சிறப்பான கல்வி அறிவையும் பெற வழிபாடு

குழந்தைகள் ஒழுக்கத்தையும் சிறப்பான கல்வி அறிவையும் பெற வழிபாடு

- Advertisement -

இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு போதுமான அறிவு வேண்டும் என்பதுதான் முதன்மையான ஒன்று. அறிவு இருந்தால் கண்டிப்பாக முறையில் அவர்களால் பணத்தை எப்படியாவது சம்பாதித்து விட முடியும். இந்த அறிவிற்கு அதிபதியாக திகழக்கூடியவள் சரஸ்வதி தேவி. சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் எந்த ஒரு வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் செல்வ செழிப்பிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது என்று தான் கூற வேண்டும். அதனால் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். பிறகுதான் மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். அப்படி சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதற்குரிய ஒரு எளிமையான முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குழந்தைகள் ஒழுக்கத்தையும் சிறப்பான கல்வி அறிவையும் பெற வழிபாடு

படிக்காமல் பணத்தை சம்பாதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் தங்களுடைய சந்ததியினர் படிக்க வேண்டும் என்பதற்காக நல்ல பள்ளிக்கூடமாக பார்த்து சேர்ப்பார்கள். அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக டியூஷன் அனுப்புவது, ஸ்பெஷல் கிளாஸ் அனுப்புவது என்று பல விஷயங்களில் ஈடுபடுவார்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றால் அந்த குழந்தைக்கு சரஸ்வதி தேவியின் அருள் என்பது வேண்டும்.

- Advertisement -

சரஸ்வதி தேவியின் அருள் இருந்தால் ஒரு குழந்தை சிறப்பாக படிக்கும் என்பதையும் தாண்டி ஒழுக்கமாக இருக்கும் என்பதுதான் முதன்மையான ஒன்றாக திகழ்கிறது. மேலும் கலைகளில் வெற்றி பெறவும், சிறந்த புத்திசாலியாகவும், அறிவாளியாகவும் திகழ்வார்கள். அப்படி சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த வழிபாட்டை அறிவுக்கு அதிபதியான புதன் பகவானுக்குரிய புதன்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். எப்படி மகாலட்சுமிக்கு ஹோரை சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமை சுக்கிர கோரையில் வழிபாடு செய்கிறோமோ அதே போல் சரஸ்வதி தேவிக்கு புதன் பகவானுக்குரிய கிழமையான புதன்கிழமை அன்று புதன் ஹோரையில் வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் கண்டிப்பாக முறையில் சரஸ்வதி தேவியின் படம் இருக்க வேண்டும்.

- Advertisement -

சற்று பெரிய குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் புதன்கிழமை புதன் ஹோரையில் “ஸ்ரீ ராமஜெயம்” எழுதுவது என்பது மிகவும் சிறப்பு. சிறிய குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் சரஸ்வதி தேவிக்கு நந்தியாவட்டம் மாலையை தங்கள் கைப்பட வைத்து ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை கூறி வழிபாடு செய்யலாம். மேலும் சரஸ்வதி தேவிக்குரிய நட்சத்திரமான மூல நட்சத்திர நாளன்றும் சரஸ்வதி தேவியை ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது மிகுந்த பலனை தரும்.

சரஸ்வதி தேவியுடைய காயத்ரி மந்திரம் தெரிந்தவர்கள் அதை உச்சரிக்கலாம். அல்லது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவே சரஸ்வதி தேவியின் மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களையும் குழந்தைகளை படிக்கச் சொல்லலாம்.

- Advertisement -

மந்திரம்:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

இந்த மந்திரத்தை தினமும் 21 முறை சரஸ்வதி தேவியை நினைத்து கூறும் குழந்தைகளின் கல்வி என்பது சிறப்பாக இருக்கும். அவர்கள் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி அடைவார்கள். படிப்பில் சிறந்து விளங்கும் குழந்தைகளாகவும் திகழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே:பெருமாளின் அருளால் பண வரவு அதிகரிக்க பரிகாரம்

சரஸ்வதி தேவியை முழுமனதோடு வழிபாடு செய்யும் இல்லத்தில் சரஸ்வதி தேவியின் அருளோடு மகாலட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும். இதனால் கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்