நேத்து சுட்ட சப்பாத்தி மீந்து போச்சா? அதை பிச்சிப் போட்டு ‘சில்லி சப்பாத்தி’ 10 நிமிஷத்துல டேஸ்டியா செஞ்சிடலாம்!

chilli-chapathi2
- Advertisement -

இரவு நேரங்களில் பல பேருடைய வீடுகளில் சப்பாத்தி செய்வது உண்டு. அப்படி செய்யும் சப்பாத்தி மீந்து போய் விட்டால் மறுநாள் காலையில் அதை தூக்கி குப்பையில் போட்டு விடுவார்கள். மீந்து போன சப்பாத்திகளை வீணாகக் குப்பையில் போடாமல் பிய்த்துக் கொண்டு பால் ஊற்றி சர்க்கரையை போட்டு ஊற வைத்து குழந்தைகளுக்கு கொடுப்பதும் உண்டு. அதை விட இப்படி சில்லி சப்பாத்தி செய்து கொடுத்தால் பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி சுலபமாக பத்தே நிமிடத்தில் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

‘சில்லி சப்பாத்தி’ செய்ய தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – 3
சமையல் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – தாளிக்க
பச்சை மிளகாய் – 2

- Advertisement -

கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்

chappathi

கரம் மசாலா – அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவிற்கு

- Advertisement -

‘சில்லி சப்பாத்தி’ செய்முறை விளக்கம்:
முதலில் மீந்து போன சப்பாத்திகளை சதுரம் சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் அதைத் தனியே ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் மீண்டும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிக்க விடவும், பின்னர் கறிவேப்பிலை உருவி போட்டு தாளிக்க வேண்டும்.

chilli-chapathi

இப்போது நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்களை போட்டு வதக்கவும். பின் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு கண்ணாடி போல் வதங்கி வந்தவுடன், வெட்டி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும், அதில் தேவையான அளவிற்கு மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்க வேண்டும். மசாலா வாசனை போனதும் அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.

chilli-chapathi1

ஒரு இரண்டு நிமிடம் நன்கு வதக்கி கொண்டே இருங்கள், பின்னர் சுருண்டு வதங்கியவுடன், பொரித்து வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் நன்கு கலந்து விடுங்கள். அவ்வளவு தான் கடகடவென பத்தே நிமிடத்தில் அசத்தலான சுவையில் காய்ந்து போன சப்பாத்தி கூட பிரஷ்ஷாக சுடசுட சில்லி சப்பாத்தியாக மாறிவிடும். இதனை தட்டில் வைத்து பரிமாறிக் கொடுத்தால் ஐந்தே நிமிடத்தில் தட்டு முழுவதும் காலியாகிவிடும். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -