10 சின்ன வெங்காயம் இருந்தால் சட்னி ரெடி! ஐந்து நிமிடத்தில் சட்டென செய்யக்கூடிய வெங்காய சட்னியை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.

chinna-vengayam-chutney
- Advertisement -

பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை அதிகமாகப் பேணிக் காக்கிறது. இதனால் பெரிய வெங்காயத்தை விட உணவில் அதிகமாக சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொண்டு வருவது நலம் தரும். நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். திடீரென சமையல் செய்யும் பொழுது எடுத்து சமைப்பதற்கு எளிதாக இருக்கும். இந்த சின்ன வெங்காயத்தை வைத்து எப்படி சட்டென சூப்பரான ஒரு சட்டியை செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

chinna-vengayam

‘சின்ன வெங்காய சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – பத்து
தக்காளி – ஒன்று
மிளகாய் வற்றல் – ஆறு

- Advertisement -

கறிவேப்பிலை – இரண்டு கொத்து
நல்லெண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடுகு – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவையான அளவிற்கு

onion-chutney1

‘சின்ன வெங்காய சட்னி’ செய்முறை விளக்கம்:
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரை கழுவி அதில் தோல் உரித்த சின்ன வெங்காயத்தை முழுதாக அப்படியே போடவும். பின்னர் அதனுடன் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் வற்றல் 6 சேர்த்து கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு கல்லுப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். சட்னிக்கு எப்பொழுதும் சாதாரண உப்பை விட கல்லுப்பு பயன்படுத்துவது கூடுதல் சுவையை கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிக்ஸி ஜாரை சுற்ற விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வானொலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் அளவிற்கு உளுந்து சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

onion-chutney

பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் கிளறி விடுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து இறக்கி விடுங்கள். அதனுடன் நறுக்கிய மல்லித்தழை போட்டு அலங்கரித்து பரிமாறினால் அட்டகாசமான சின்ன வெங்காய சட்னி நொடியில் தயாராகி விட்டிருக்கும். வித்தியாசமான முறையில் ஆரோக்கியமான கூடுதல் சுவையுடன் இருக்கும் இந்த சட்னியை ஒரு முறை நீங்களும் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

onion-chutney0

சின்ன வெங்காயம் சாற்றை எடுத்து தலை முடியில் தடவினால் தலைமுடி உதிரும் பிரச்சனை தீரும். மேலும் இதில் இருக்கும் விட்டமின் பி உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி உடலை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும். ரத்த சோகை பிரச்சனை, தலை வலி பிரச்சனை, பார்வை பிரச்சனை, வாய் துர்நாற்றம், சிறுநீரக பிரச்சனை போன்ற எண்ணற்ற பிரச்சினைகளுக்கு எளிதாக நிவாரணம் கிடைக்க செய்யும். மேலும் கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் கூட உதவி செய்யும். இத்தகைய சின்ன வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியத்தை எளிதாக பேணிப் பாதுகாக்கலாம்.

- Advertisement -