சித்தன்னவாசல் குகைக் கோவில் வரலாறு

Chithannavasal
- Advertisement -

குகைக் கோவில் வரலாறு

சித்தன்னவாசல் ஓவியங்கள் சமணர்களின் குகைக்குள் தான் வரையப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்கு ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற ஒரு சிறப்புப் பெயரும் இருக்கிறது. புதுக்கோட்டையில் அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது இந்த சித்தன்னவாசல் என்ற ஊர். ‘அன்னவாயில்’ என்பது காலப்போக்கில் மாறி ‘அன்னவாசல்’ ஆக அழைக்கப்பட்டு வருகிறது. அன்ன வாசலின் முன் பகுதியில் தான் சித்தன்னவாசல் அமைந்திருக்கிறது. ‘சித்தனம் வாசஹ்’ இந்த வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது தான் இந்த சித்தன்னவாசல். ‘துறவிகள் இருப்பிடம்’ என்பது தான் இதன் அர்த்தம். சிறிய, பெரிய பாறைகளைக் கொண்ட இந்த இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக கூறப்படுகிறது.

- Advertisement -

Chithannavasal

சித்தன்னவாசல் ஓவியமானது ஏழாம் நூற்றாண்டில் சிம்ம விஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மனால் வரையப்பட்டது என்று கூறப்படுகிறது. இவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறியவர். ஆனால் இந்த சித்தன்னவாசல் ஓவியங்கள் சமண மதத்தை மையமாக வைத்துள்ளது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் நமக்கு உறுதிபடுத்துகிறது.

மலைக்கு மேலே ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. படிகளில் ஏறி கிழக்குப்பக்கமாக நோக்கினால் புகழ் பெற்ற சமணர் படுக்கைகள் நம்மால் காணமுடியும். மொத்தமாக ஏழு படுக்கைகள் இருக்கின்றது. அதில் தலை வைத்து படுத்துக் கொள்ள, கல்லாலான மேடைகளும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கையின் மீது தான் சமணமுனிவர்கள் படுத்து உறங்கிய தாக கூறப்படுகிறது. இதில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்மொழி கல்வெட்டுகள் கிபி எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப் பட்டுள்ளது. அந்த கல்வெட்டுகளில் சமணத்துறவிகள் பெயர்களானது காணப்படுகிறது. இந்தப்பகுதி ஏழடிப்பட்டம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கிபி பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த குகையில் சமணமுனிவர்கள் தங்கியிருந்தார்கள் என்பதற்கு இங்குள்ள கல்வெட்டுகள் தான் ஆதாரம்.

- Advertisement -

Chithannavasal

ஓவியங்களின் சிறப்பு

இந்தக் குகையின் கூரையின் உட்புறத்தில் உள்ள ஓவியங்கள் காண்பதற்கு உருவத்திலும், நிறத்திலும் சிறந்து விளங்குகிறது.

- Advertisement -

அரசனது மணிமகுடத்தில் சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்ட மணிகள் பதிக்கப்பட்ட கிரீடம் ஒன்று காணப்படுகிறது. காதுகளில் குண்டலங்கள் தெரிகின்றது. அரசியின் தலையில் மணிமகுடமானது அழகாக காணப்படுகிறது. அரசியின் காதுகளில் வளையங்கள் காணப்படுகின்றன. பண்டைய தமிழகமானது ஓவியக்கலைகளிலும், நடன கலைகளிலும் பல நூற்றாண்டுக்கு முன்னரே அடைந்த முன்னேற்றத்தை இந்த ஓவியங்கள் எடுத்துக்காட்டுகின்றது. இந்த அரசனும் அரசியும் மகேந்திரவர்மனும், அவருடைய மனைவியும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஒரு சிலர் அந்த ஓவியமானது வல்லவ பாண்டியனும் அவர் மனைவியும் தான் என்று கூறுகின்றனர். அங்கு கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் சித்தன்னவாசல் ஓவியங்கள் பாண்டியர் காலத்து ஓவியங்கள் தான் என்று சொல்லப்படுகிறது.

Chithannavasal

சித்தன்னவாசல் ஓவியங்கள் சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த குகை ஓவியங்கள் 1990-களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக அந்த ஓவியங்களுக்கு தற்போது வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியாக இருந்தாலும் சித்தன்னவாசல் இப்போது சுற்றுலாத்தலமாக காணப்படுகிறது. 2000 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியத்தை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கண்டு ரசிக்க வேண்டும்.

செல்லும்வழி

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் சாலையில் 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது சித்தனவாசல்.

முகவரி
சித்தன்னவாசல் குகை ரோடு,
மதிய நல்லூர்
தமிழ்நாடு 622 101.

இதையும் படிக்கலாமே
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் தல வரலாறு

English Overview:
Here we have Chithannavasal temple history in Tamil. Sittanavasal cave temple details. Chithannavasal timings. Chithannavasal paintings.

- Advertisement -