இன்று சித்திரை அஷ்டமி! மனக் கஷ்டம் தீர இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யுங்கள்.

krishna-mantra

சித்திரை மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளுமே விசேஷமான நாட்கள்தான் இந்த வரிசையில் இன்று சித்திரை அஷ்டமி. இந்த தினத்தில் எந்த இறைவனை நினைத்து, எந்த மந்திரத்தை உச்சரித்தால், வாழ்வு வளம் பெறும் என்பதை பற்றியும், அந்த மந்திரத்தை குறிப்பாக எந்த நேரத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்ற ஒரு ரகசிய சூட்சுமத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

காலை உங்களது இறைவழிபாடு எப்பவும் போல் முடிந்து இருந்தாலும், பரவாயில்லை. இந்த மந்திரத்தை காலை உச்சரிக்க வேண்டாம். மாலை நேரம் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் ஒரு நெய் தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி வைத்துவிட்டு, கிருஷ்ண பகவானுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பொருளை நைவேத்தியமாக படைத்து, அதன் பின்பு கிழக்குப்பக்கம் அமர்ந்தவாறு, 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஓம் மதுசூதனா போற்றி போற்றி!

krishna

இந்த மந்திரத்தை குறிப்பிட்ட இந்த சித்திரை அஷ்டமியில் உச்சரிக்கும்போது கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதத்தை நம்மால் முழுமையாகப் பெற முடியும். திருமணத்தடை, கடன் பிரச்சனை, குழந்தை இல்லாதவர்கள் அனைவரும் இந்த மந்திரத்தை  மாலைநேரம் உச்சரித்து கிருஷ்ண பகவானை மனதார வழிபட்டு வந்தால், மிகவும் சிறப்பானது. உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் இரண்டு துளசி இலைகளை கிருஷ்ணருக்கு சூட்டி இந்த பூஜையை நிறைவு செய்வது மேலும் சிறப்பு சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே
இன்று சித்திரை இரண்டாவது வெள்ளி! லட்சுமிதேவியை இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால், பொருளாதாரப் பிரச்சினை தீரும்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Krishna manthiram in Tamil. Krishna manthirangal Tamil. Krishna manthiram Tamil. Krishna mantra in Tamil. Krishna mantras Tamil.