நாளை சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி! கடன் தீர, கஷ்டங்கள் காணாமல் போக, விநாயகர் வழிபாடும், உச்சரிக்க வேண்டிய 1 வரி மந்திரமும்!

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி என்றாலே நம்முடைய சங்கடங்கள் காணாமல் போக விநாயகர் வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக நாளை சித்திரை மாதம், அதுவும் வெள்ளிக்கிழமை அன்று சங்கடகரசதுர்த்தி வருகின்றது. இந்த நாளில் விநாயகரை எந்த முறைப்படி, எந்த மந்திரத்தை உச்சரித்து, எந்த பூவை கொண்டு, எப்படி வழிபாடு செய்தால் நம்முடைய கடன் பிரச்சனை தீரும். அந்த விநாயகரின் அருள் ஆசியோடு, மகாலட்சுமி சுக்கிர பகவானின் அருள் ஆசியையும் முழுமையாகப் பெற, நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போக, விநாயகப் பெருமானை நினைத்து எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான சில தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vinayagar1

சுக்கிர பகவானுக்கும், மகாலட்சுமிக்கும் உரியது இந்த வெள்ளிக்கிழமை. இந்த வெள்ளிக்கிழமையை மேலும் சிறப்பாக்க, சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வந்திருக்கின்றது. ஆக இந்த நாளை நாம் தவற விடவே கூடாது. வேண்டிய வரங்களை எல்லாம், அந்த இறைவனிடமிருந்து சுலபமாக பெற்றுவிடலாம். உண்மையான பக்தியோடு சில சூட்சமம் முறைகளைப் பின்பற்றி பூஜை செய்யும் பட்சத்தில்!

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று சங்கடஹரசதுர்த்தி வந்தால், ஸ்படிகத்தில் செய்யப்பட்ட விநாயகரை நம் வீட்டில் வைத்து பூஜை செய்தால், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பல பேர் வீடுகளில் இந்த ஸ்படிக விநாயகர் இருக்க வாய்ப்பு கிடையாது. கவலைப்பட வேண்டாம். உங்களுடைய வீட்டில் விநாயகர், எந்த ரூபத்தில் இருந்தாலும் அந்த விநாயகரை மனதார நினைத்து வழிபாடு செய்வதில் தவறு கிடையாது.

malligai poo

நாளை விநாயகருக்கு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். வெள்ளை நிற மல்லிகை பூ, முல்லை, ஜாதி மல்லி, வெள்ளெருக்கம் பூ, மிகவும் சிறப்பு வாய்ந்தது. விநாயகருக்கு பால் தயிர் வெல்லம் இந்த மூன்று பொருட்களை கட்டாயமாக நிவேதனமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் விநாயகரது சிலை இருந்தால், அந்த சிலைக்கு பால் அபிஷேகம் தயிர் அபிஷேகம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். வீட்டில் விநாயகர் சிலை இல்லாதவர்கள் முடிந்தால் கோவிலுக்கு சென்று விநாயகரது அபிஷேகத்திற்குப் பால் தயிர் இந்த இரண்டு பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

vinayagar

விநாயகரது படம் இருந்தால் அந்த படத்தை சுத்தமாக துடைத்து பொட்டுவைத்து பூக்களால் அலங்காரம் செய்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எந்தப் பூ வைத்தாலும் விநாயகருக்கு அருகம் புல் வைக்க மறக்காதீர்கள். விநாயகர் படத்திற்கு முன்பாக சிறிய கிண்ணத்தில் காய்ச்சி ஆறவைத்த பால், தனியாக ஒரு தட்டில் வெல்லம் வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் போல வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

vinayagar

இப்போது விநாயகர், பூஜைக்கு தயாராகிவிட்டார். பூஜை அறையில் விநாயகர் திரு உருவ படத்திற்கு முன்பாக ஒரு பாயை விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் மனக்கஷ்டம் அத்தனை கஷ்டங்களும் நீங்க வேண்டும் என்று விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு கண்களை மூடி மனதார ‘ஓம் பாலசந்த்ராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

arugampul-vinayagar

அதன்பின்பு விநாயகருக்கு தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். சங்கடஹர சதுர்த்தி பூஜையை மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் தொடங்குவது மிகவும் நல்லது. அப்போது தான் சந்திரபகவான் உதயமாகி இருப்பார் அல்லவா? இந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று காலை முதல் உபவாசம் இருந்து, மாலை விநாயகரை இப்படி வழிபாடு செய்வது பல நல்ல பலன்களை கொடுக்கும்.

Vinayagar-potri-1

உடல்நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள், உபவாசம் இருக்க முடியாதவர்கள், வயிறார சாப்பிட்டும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து, உண்மையான பக்தியோடு நாளை வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுபவர்களுக்கு நிச்சயமாக விமோசனம் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -