சுபகிருது தமிழ் வருட பிறப்பு சித்திரை மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

chithirai
- Advertisement -

தமிழ் வருட பிறப்பு 2022 சுபகிருது ஆண்டு சித்திரை மாத ராசிபலன்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் எப்படி இருக்கப் போகின்றது? பங்குனி முடிந்து சித்திரை துவங்கியதும் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு பிறக்கிறது. இவ்வாண்டு இனிய பலன்களாக அமைய வேண்டும் என்று எல்லோருக்குமே மனதில் புது உற்சாகம் பிறந்திருக்கும். சுபகிருது ஆண்டு 12 ராசியினருக்கும் எப்படி அமைய இருக்கிறது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சுபகிருது ஆண்டு துவங்கிய நல்ல நேரம் அமைதியான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும். சித்திரை மாதம் முழுவதும் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் மாறி நிம்மதியை கொடுக்க போகின்றது. குடும்பத்தில் புதிய வரவு ஒன்று உண்டாகப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கிற நிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. உங்களுடைய முழு திறனை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறுசிறு குறைகள் நீங்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பரிகாரமாக செவ்வாய்க்கிழமையில் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுபகிருது ஆண்டு சுப பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. இதுவரை ஏற்பட்டுக் கொண்டிருந்த தடைகளுக்கு முடிவு கிடைக்கக்கூடிய இனிய மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிறுக சிறுக சேமித்த பணம் பெரிய அளவில் பயன் கொடுக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார ரீதியான ஏற்றம் காணப்படுவதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. பரிகாரமாக சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றுவது நல்லது.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாத ராசி பலன் சிறப்பாக அமைய இருக்கிறது. உங்கள் மனதில் நீண்ட நாள் வேண்டுதல்கள் இம்மாதம் நிறைவேறும். தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமான உயர்வு அதிகரிக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. பெரிய தொகையை சரியான வகையில் இலாபம் ஈட்டக்கூடிய படி முதலீடு செய்தால் நல்ல லாபத்தை காண முடியும். பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் சேரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக அகலும். பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபடுங்கள்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. சுபகிருது சித்திரை மாத பலன்கள் உங்களுக்கு மனதில் புது உற்சாகத்தை ஏற்படுத்தும். இதுவரை நடக்கவில்லையே என்று நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும். தடைப்பட்டுக் கொண்டிருந்த நல்ல செய்திகளுக்கு வழிகள் பிறக்கும். குடும்பத்தில் சுப வரவு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் ஏற்படும் என்பதால் உங்களுடைய முழு ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வேலையில் ஈடுபாடு குறையாது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. பல துறைகளில் பெண்கள் சாதனை புரிவீர்கள். பரிகாரமாக திங்கட்கிழமையில் சோமவார விரதம் இருப்பது நல்லது.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சுபகிருது ஆண்டில் சித்திரை மாத பலன்கள் படி உங்களுக்கு பொருட் சேர்க்கை அதிகரிக்கும். நீங்கள் ஆடம்பரமாக செலவு செய்ய முயற்சி செய்வீர்கள். ஒரளவுக்கு மேல் செலவுகளை குறைத்துக் கொள்வது தான் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல தரப்பட்ட இடங்களில் இருந்து இடையூறுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை தைரியமாக முன் வைப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். ஆரோக்கிய தடைகள் அகலும். பரிகாரத்திற்கு புதன்கிழமை தோறும் பச்சை பயறு தானம் செய்வது நல்லது.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக கூடிய இனிய மாதமாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய உழைப்பிற்கு உரிய வருமானம் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படும் வாய்ப்பு உண்டு. சரியான நபர்களை அணுகும் பொழுது அனைத்தும் மாறும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வேலை தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகும் யோகம் உண்டு. உங்களுடைய குழப்பத்திற்கு முடிவு கிடைக்கக்கூடிய நல்ல மாதமாக அமைகிறது. பரிகாரத்திற்கு பச்சை நிறத்தை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாதம் உங்களுடைய எண்ணங்கள் நேர்மறையாக செயல்படும் யோகம் உண்டு. எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். அவ்வபோது அமைதியான சூழலில் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. புதிய தொழில் மற்றும் வியாபாரம் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மூத்த சகோதரர்களை அனுசரித்துச் செல்லுங்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த குறைகள் படிப்படியாக மறையும். பரிகாரத்திற்கு வியாழன் கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி குருபகாவன் அழல்து தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு சுபகிருது ஆண்டின் சித்திரை மாத பலன்களின் படி அமோகமான அமைப்பாக அமைந்துள்ளது. இதுவரை சோர்வுடன் காணப்பட்ட நீங்கள் இனி புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தாமதம் ஆனாலும் அதிரடியான வெற்றிகள் கிடைக்கப் போகிறது. எதிலும் நிதானம் மற்றும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும் வாய்ப்பு உண்டு. எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளின் மீது கூடுதல் அக்கறை கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அவிழும். பரிகாரத்திற்கு ஞாயிற்றுக் கிழமையில் சூரிய வழிபாடு செய்வது நல்லது.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாதத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எது கிடைத்தாலும் அதை மனதார ஏற்றுக் கொள்வது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர பயணங்கள் மூலம் நல்ல அனுபவம் கிடைக்கப் போகிறது. பொருளாதார ரீதியான ஏற்றம் இருப்பதால் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் ஒரு சிலர்க்கு அனுகூல பலன் கொடுக்கும். போட்டி பொறாமைகளை தவிர்த்து உங்களுடைய வேலையில் மட்டும் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. பரிகாரமாக உளுந்தம் பருப்பை தானம் செய்வது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு சுபகிருது ஆண்டில் சித்திரை மாத பலன்கள் அற்புதமாக அமைகிறது. நீங்கள் நினைத்ததை நினைத்தபடி நடக்கும் அற்புதம் உண்டு. தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உடைய பார்வையில் உங்களுடைய அந்தஸ்து உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உங்களுடைய பங்களிப்பு அதிகமாக கொடுப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க படும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். கிடைக்கின்ற வாய்ப்பு ஒரு முறைதான் கிடைக்கும் என்பதால் கிடைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பரிகாரத்திற்கு திங்கட் கிழமையில் சிவ வழிபாடு செய்து வருவது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாத பலன் புது வரவை அள்ளித் தெளிக்க இருக்கிறது. குடும்பத்தில் குதூகலத்திற்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த கடன் பாக்கிகள் அடையும். புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். நண்பர்களுடைய ஆதரவு அதிகரிக்கத் துவங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் படிப்படியாக மறையும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ஆரோகி ரீதியான பிரச்சினைகளை உடனுக்குடன் மருத்துவரிடம் சென்று காண்பிப்பது நல்லது. பரிகாரத்திற்கு பைரவரை சனிக்கிழமைகளில் வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாதம் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு தேவையற்ற விமர்சனங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் யோகம் உண்டு. கணவன்-மனைவி பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். மூன்றாம் நபர்களின் அறிமுகத்தில் கவனம் தேவை. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரம் ஏற்றம் காணும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பரிகாரத்திற்கு அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.

- Advertisement -