சித்திரை மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

chithirai matha rasi palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நற்பலன்கள் அதிகம் கிடைக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். சுப விரயங்களும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பேச்சில் கோபத்தையும் வேகத்தையும் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. புதிய நபர்களை நம்பி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். திருமணம் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருந்தாலும் வேலையில் தங்களுடைய திறமையை காட்டி பல நல்ல வாய்ப்புகளை பெற முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை தடைபட்டிருந்த தொழில் சம்பந்த சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெற்று தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முயற்சிகள் கைகூடும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் அதிஷ்டம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையை திறம்பட செய்வதன் மூலம் வேலையில் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் நினைத்ததை விட நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த போட்டிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றியைக் கண்டு தொழிலை அடுத்த கட்ட நிலைக்கு முன்னேற்றுவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விருப்பங்கள் நிறைவேறும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதைவிட அதிகமாக செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் நலனில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். சொத்து சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த நல்ல சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு மாற்று மாற்றுவதற்குரிய யோகமும் உண்டாகும். அரசு வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி கிடைக்கும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். சகோதரர் வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

வேலையைப் பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க சற்று கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலை விரிவு படுத்த தேவையான உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்மனை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தடைகள் நீங்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் தாமே செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். எதிர்ப்பாராத விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்க ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் கைகூடும். ஒரு சிலருக்கு கடன் அடைவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதன் மூலம் தொழிலில் இருந்து வந்த குழப்பங்களை நீக்க முடியும். நல்ல லாபத்தையும் பெற முடியும். வெளிநாடு தொடர்பான வணிகத்தை ஊக்குவிக்கவும். புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் சிறப்பான மாதமாக திகழப்போகிறது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்ததை முடிக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் வாங்கும் பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். வாகன யோகம் உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அந்த வேலையை திறம்பட செய்வதன் மூலம் எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் தொழிலில் புதிதாக ஒப்பந்தங்களை செய்வதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து உடன் இருப்பவர்களை இருப்பவர்களிடம் ஆலோசித்து பிறகு முடிவெடுப்பது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செல்வாக்கு உயரும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை இதுவரை இருந்த தடைகள் நீங்கி நல்ல பண வரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும் .கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திடீர் பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். சுபகாரியத் தடை விலகும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி பொறுப்புடன் செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளை உரிய நபர்களிடம் ஆலோசனை செய்த பிறகு மேற்கொண்டால் நல்ல பலனை பெற முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகள் தேடி வரும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் வாக்குவாதங்களில் ஈடுபடும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப் பெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிக்கனத்தை கடைபிடிக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதிக அளவில் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். வீண்விரயங்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையை திறம்பட செய்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று சலுகைகளும் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். எவ்வளவு முயற்சியை மேற்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு பலனை அடைய முடியும். வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாமர்த்தியமாக செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது சற்று சிரமமாகவே இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை நல்ல முறையில் செய்வதன் மூலம் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக வாங்கிய கடனை அடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சீதா ராமரை வழிபட வேண்டும்.

- Advertisement -