நாளை சித்திரை மாத பிறை தரிசனம்! இந்த 2 ராசிக்காரர்கள் மட்டும், அதி அற்புதம் வாய்ந்த இந்த நாளை தவற விடவே கூடாது. ஜாக்பாட்டை தட்டி செல்ல போகும் அந்த 2 ராசிக்காரர்கள் யார் யார்?

moon

பொதுவாகவே அமாவாசை திதி முடிந்த பின்பு, வரக்கூடிய மூன்றாவது நாளில் பிறை நிலவை தரிசனம் செய்வது, நமக்கு அதிகப்படியான நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். அதிலும் இந்த சித்திரை மாதம் வரப்போகும் பிறை நிலவு தரிசனத்தை யாரும் தவறவிடாதீர்கள். சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த பிறை தரிசனத்தை ஒருமுறை தரிசனம் செய்தாலே, ஒரு வருடம் பிறை நிலவை பார்த்த புண்ணியம் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நாளை வரக்கூடிய இந்த மூன்றாம் பிறை நிலவை எப்படி தரிசனம் செய்ய வேண்டும். யார் யாரெல்லாம் தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக எந்த 2 ராசியில் பிறந்தவர்கள் நாளை வரக்கூடிய இந்த அதி அற்புதம் வாய்ந்த நாளை தவற விடக்கூடாது என்பதை பற்றிய சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Lord Shiva

மனரீதியான குழப்பங்களை கொண்டவர்கள், மாதம்தோறும் வரக்கூடிய பௌர்ணமி நிலவையும், தரிசனம் செய்ய வேண்டும். அதேபோல் மூன்றாம் பிறை நிலவையும் தரிசனம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திர பகவான் நீச்சம் அடைந்து இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் மன கஷ்டம், மனக்குழப்பம், மன அழுத்தம் இப்படியாக மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருவார்கள். அவர்களிடம் மனத் தெளிவு இருக்காது. எந்த முடிவை, எப்போது, எப்படி, எடுப்பது என்று தெரியாமல் திணறி வருவார்கள்.

மனதளவில் குழப்பமான நிலையில் உள்ளவர்கள் அனைவருமே நாளை சந்திர பகவானை தரிசனம் செய்யலாம். நிச்சயமாக உங்களுடைய மனம் குழப்பத்திலிருந்து தெளிவு பெறும் என்பதில் சந்தேகமே கிடையாது.  சிவபெருமான் தன்னுடைய தலையில் சூடிக் கொண்டு இருக்கும் அந்த நிலவை தரிசனம் செய்வதற்கு சமம் தான், இந்த மூன்றாம் பிறை தரிசனம். ஆக இந்த பிறைநிலவு தரிசனத்தை நாளை எல்லோருமே தரிசனம் செய்யலாம்.

pray

சரி, இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் எப்படி வழிபடுவது? சாதாரணமாக உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது பால்கனியிலோ, முன்பக்கத்திலோ பின் பக்கத்திலோ எங்கு நின்று பார்த்தால் இந்த பிறைநிலவு தெரியுமோ அந்த இடத்தில் நின்றோ அல்லது அமர்ந்தோ பிறைநிலவு தரிசனத்தை மேற்கொள்ளலாம். இரண்டு கைகளையும் ஏந்தி, அந்த இரண்டு உள்ளங்கைகளுக்கும் நடுவே ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை வைத்து, பிறை நிலவை பார்த்து உங்களுக்கு இருக்கக்கூடிய மனகஷ்டம் பண கஷ்டம் இப்படி எல்லா கஷ்டங்களும் தீர வேண்டும் என்று மனதார சந்திர பகவானிடம் வேண்டிக் கொண்டாலே போதும். உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும்.

கையில் இருக்கும் பச்சரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்து வாசலில் கோலம்போட பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இல்லை காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டாலும் தவறு கிடையாது. ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி கையில் வைத்துக்கொண்டால் போதும். இரவு இந்த மூன்றாம் பிறை உதயமான பின்பு, உங்களால் எவ்வளவு நேரம் பிறை நிலவை பார்த்து, அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய முடியுமோ, அத்தனை மணி நேரம் தியானம் செய்யலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

astro1

நாளை வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனத்தை எந்த இரண்டு ராசிக்காரர்கள் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று இப்போது தெரிந்து கொள்வோமா? தனுசு ராசிக்காரர்களும், மீனம் ராசிக்காரர்களும் நாளை இந்த சந்திர பகவானின் மூன்றாம் பிறை தரிசனத்தை தவறாமல் தரிசனம் செய்ய வேண்டும். இந்த இரண்டு ராசிக்காரர்கள் நாளை வர கூடிய மூன்றாம் பிறை நிலவை தரிசனம் செய்து விட்டால், அவர்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாக எதிர்பாராத ஜாக்பாட் அடிப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நீங்களே எதிர்பார்க்காத திருப்புமுனை ஏற்படும். தீராத கஷ்டங்கள் தீரவும், இன்றைக்கு நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அனைவரும் சீக்கிரமே வெளிவர வேண்டும் என்றும், அந்த சந்திர பகவானை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.