இன்று சித்திரை சதுர்த்தி! விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது எல்லா சங்கடங்களும் தீரும்!

vinayagar

பொதுவாகவே திங்கட்கிழமை அன்று விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சதுர்த்தி தினம் என்பதால், இந்த தினத்தில் விநாயகப்பெருமானை வீட்டிலிருந்தே, மனதார நினைத்து வழிபடுவதன் மூலம், இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கும் தீர்க்கமுடியாத சங்கடங்களுக்கு கூட, சுலபமான தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய சங்கடங்களை தீர்க்கப் போகும் அந்த ஒரு வரி மந்திரம் என்ன என்பதைப் பற்றியும், அந்த மந்திரத்தை குறிப்பாக எத்தனை முறை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

arugampul-vinayagar

பொதுவாகவே எல்லா வகையான பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும், முழுமுதற் கடவுள் என்றால், அது விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். சுலபமான முறையில் எல்லோராலும் வணங்கப்படும் தெய்வம் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எல்லோருக்கும் மிகுந்த பிடித்தமான கடவுள் என்றாலும், அந்த வரிசையில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள இந்தப் பிள்ளையாரை இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதன் மூலம், நம்மால் அதிகப்படியான பலனை பெற முடியும். உங்களுக்கான மந்திரம் இதோ

ஓம் கற்பகநாதா அருள்புரிவாய்!

Vinayagar-1

இந்த மந்திரத்தை காலை வேளையில் உச்சரிக்கலாம். இன்று உங்களுடைய காலை நேர பூஜை முடித்து இருந்தால், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் 308 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிக சிறப்பான பலனை தரும். உங்களுடைய பூஜை அறையில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு, விநாயகருக்கு உங்களால் முடிந்த நைய்வேத்தியம் வைத்து, தீப ஆராதனை காட்டி முடித்து, அதன் பின்பு இந்த மந்திரத்தை உச்சரித்து, உங்களுடைய சதுர்த்தி விரதத்தை முடிப்பது மிகவும் உகந்தது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை சித்திரை மாத ஞாயிற்று கிழமை! சூரிய பகவானைப் பார்த்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் மனக்குழப்பம் நீங்கும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vinayagar poojai manthiram in Tamil. Vinayagar manthiram. Vinayagar mantra. Vinayagar mantras Tamil. Pillaiyar manthiram Tamil.