நாளை சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி! இந்த மந்திரத்தை உச்சரித்தால் மகா விஷ்ணுவின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

vishnu

சித்திரை மாதம் என்பது பலவிதமான மங்கள காரியங்களை செய்வதற்கு ஏற்ற மாதமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு விசேஷங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் நாளை தேய்பிறை ஏகாதேசி வரவிருக்கிறது. இந்தத் ஏகாதேசி மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்து. இந்த விசேஷமான நாளில் குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை, குடும்பத்தோடு சேர்ந்த உச்சரிப்பதன் மூலம், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அமைதி நிலவும். சந்தோஷம் நிலவும். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. விஷ்ணுவும், மகாலட்சுமியும் எப்படிப்பட்ட தம்பதியினரோ, அதேபோல் வீட்டில் இருக்கும் கணவன் மனைவியும் சேர்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

kamatchi-vilakku

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு 8 மணிக்கு முன்பாக பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, நைவேத்தியமாக உங்களால் முடிந்தை இறைவனுக்கு படையலாக வைத்து, குடும்பத்தோடு சேர்ந்து மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் மனதார நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான மந்திரம் இதோ..

ஓம் சக்கரதாரியே நமஹ!

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை மகாவிஷ்ணுவை நினைத்து உச்சரிக்கவேண்டும். கட்டாயமாக  உங்களது குடும்பம் சுபிட்சம் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்களால் காலை நேரத்தில் பூஜை செய்ய முடியவில்லை என்றால் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்யலாம்.

vishnu-laxmi

- Advertisement -

பூஜையை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வெளியில் வந்து ஆகாயத்தை ஒருமுறை உற்றுநோக்கி மனதார இரு கைகளையும் கூப்பி மகாவிஷ்ணுவை மனதார நினைத்து வணங்குங்கள். அதன்பின்பு மனதிலிருக்கும் கோரிக்கையை வேண்டிக்கொள்ளுங்கள். கூடிய விரைவில் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
துளசி செடியை வலம் வரும் போதும், பறிக்கும் போதும் இந்த மந்திரத்தை சொல்வது மிக அற்புதமான பலனை தரும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ekadashi pooja vidhi in Tamil. Theipirai ekadasi. Ekadasi pooja Tamil. Ekadasi mantra. Ekadasi pooja mantra. Ekadashi puja vidhi.