நாளை 12/5/2022 சித்திரை ஏகாதசி! கிடுகிடுவென தங்கம் சேர, தீராத கடன் பிரச்சனை தீர ஏகாதசியில் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயம் என்ன?

perumal-thulasi-vilakku
- Advertisement -

கடன் பிரச்சனைகள் தீரவும், வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்கவும், அதிர்ஷ்டமும், தங்கமும் பெருகிக் கொண்டே செல்லவும் ஏகாதசியில் பெருமாள் வழிபாடு செய்வது ரொம்பவே விசேஷமானது. வீட்டில் இருக்கும் வறுமையைப் போக்கி, செல்வ செழிப்பை அதிகரிக்க செய்யக்கூடிய இந்த ஏகாதசி விரதத்தை சித்திரை மாதத்தில் இப்படி கடைபிடிக்க, எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக நீங்கி சுபிட்சம் உண்டாகும் தெரியுமா? நாளை சித்திரை ஏகாதசியில் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிபாடு முறை என்ன? என்பதைத் தான் இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சித்திரை ஏகாதசியில் பெருமாளுக்கு ரொம்பவே விசேஷமான பூஜைகள் நடைபெறும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி இந்த நாளில் வழிபட்டு வருபவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வ செழிப்பு ஏற்படும் என்கிற ஐதீகம் உண்டு. குறிப்பாக தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் போன்றவர்கள் தங்களுடைய லாபத்தில் இருந்து ஒரு பங்கை மட்டும் ஏகாதசியில் பெருமாளுக்கு செலுத்தி வர லாபம், வருமானம் பன்மடங்கு உயரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அந்த வகையில் நாளை சித்திரை ஏகாதசி நாளில் காலையிலேயே வீடு முழுவதும் சுத்தம் செய்து பெருமாளுக்கு துளசி தீர்த்தம் வைத்து அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். துளசி தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்படும் பொழுது ஏகாதசியின் பலன் முழுமையாகக் கிடைக்கப் பெறுகிறது. துளசி மாடம் வைத்திருப்பவர்கள் அதற்கு விளக்கு ஏற்றி துளசி பூஜை செய்வது மிகுந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது ஆகும்.

துளசி செடிக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு அகல் தீபம் ஏற்றி மூன்று முறை வலம் வந்து தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தால் எத்தகைய பிரச்சினைகளும் உங்களை விட்டு ஓடிவிடும். குறிப்பாக வீண் விரயங்கள் ஏற்படாது, பணத் தட்டுப்பாடு, பணக் கஷ்டம் வரவே செய்யாது. துளசி மகாலட்சுமிக்கு இணையாகக் கருதப்படுவதால் ஏகாதசியில் துளசி வழிபாடு செய்பவர்களுக்கு பசி, பட்டினி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

- Advertisement -

கவலையில் இருப்பவர்கள் அந்த கவலையை விடுத்து அந்த நாளில் முடிந்தால் விரதம் இருந்து பெருமாள் மந்திரங்களை உச்சரித்து பெருமாளுக்கு பூஜை செய்ய வேண்டும். பெருமாள் மற்றும் தாயாருடன் இருக்கக் கூடிய படத்திற்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். மேலும் துளசி தீர்த்தம் தயார் செய்து கொள்ள வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி நாலைந்து துளசி இலைகளை போட்டு பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்த்து வாசம் மிகுந்த தீர்த்தம் தெய்வீக மூலிகையாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தாம்பூல தட்டில் உங்களுடைய தங்க நகைகள் ஏதாவது ஒன்றை வைத்து தீர்த்தம் தெளித்து அபிஷேகம் செய்ய வேண்டும். அது போல பெருமாள் சிலை மற்றும் லட்சுமி சிலை வைத்திருப்பவர்கள் அதற்கு துளசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யலாம். மேலும் ஏலக்காய் மாலை சாற்றி வழிபடுவது, கிராம்பு மாலை கோர்த்து வழிபடுவது போன்றவற்றையும் இந்நாளில் செய்யலாம். சித்திரை ஏகாதசியில் வீட்டிலேயே எளிமையான முறையில் சர்க்கரை பொங்கல் நைவேத்யம் வைத்து பெருமாளுக்கு இவற்றையெல்லாம் செய்து அபிஷேக, ஆராதனைகள் செய்தால் தீராத கடன் எல்லாம் தீர்ந்து, அதிர்ஷ்ட மழை உங்கள் பக்கம் பொழியும்.

- Advertisement -