நம் பாவங்களை மன்னிக்கும் சித்திரகுப்தருக்கு சித்ரா பௌர்ணமி(26/4/2021) அன்று சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

chitra-gupta-pournami

சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தரை எல்லோரும் வழிபடுவது வழக்கம். எமலோகத்தில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் கணக்கை எழுதி வைப்பவர் ‘சித்திரகுப்தர்’. இந்த கணக்கின் அடிப்படையில் தான் நமக்கு சொர்க்கம், நரகம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமியில் உதித்த சித்திரகுப்தர் அருள் பெற அவரை எப்படி எளிய முறையில் வழிபடுவது? நம் பாவங்கள் தீர சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

chitraguptan

சித்ரா பௌர்ணமி அன்று சிறிய கலசம் ஒன்றை வைத்து அதில் சித்திர குப்தரை ஆவாஹனம் செய்யலாம். அதாவது உங்களிடமிருக்கும் செம்பு அது பித்தளை கலசத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். அதன் வாய் பகுதியில் மலரை சுற்றிக் கொள்ளுங்கள். அதில் கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லி சித்ர குப்தரை வரவழைக்க (ஆவாகனம்) செய்யுங்கள்.

சித்ர குப்த மந்திரம்:
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்!!
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்!!

praying-god

பூமியில் நாம் தெரிந்தோ! தெரியாமலோ! செய்த பாவங்களுக்கு விமோசனம் தேடுவதற்கு சிறந்த நாள் தான் இந்த சித்திரா பௌர்ணமி. இன்றைய நாளில் நாம் வழிபடும் ஒவ்வொரு விஷயமும் நம்முடைய புண்ணியங்களையும், பாவங்களையும் பற்றியதாக இருப்பது நல்லது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ பாவங்களை செய்திருப்பீர்கள். அதற்கான மன்னிப்பு சித்திரகுப்தரிடம் கேட்டு விடுங்கள். வழிபாட்டின் பொழுது கட்டாயம் நோட்டுப் புத்தகம், பேனா ஒன்றை புதிதாக வாங்கி வைத்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு நோட்டு, பேனா வாங்கிக் கொடுப்பது, அன்னதானம் செய்வது, பச்சரிசி தானம் செய்வது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது.

உண்மையிலேயே சித்திர குப்தரை வழிபடுபவர்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும். இவ்வுலகில் 13 வகையான சாபங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் இருக்கும் பெரும்பாலான சாபங்கள் உங்களையும், அடுத்த அடுத்த சந்ததியினர் வரையும் வாழ விடவே செய்யாது. அத்தகைய பாவங்கள் நீங்க சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து வழிபட வேண்டும். சித்ரகுப்தர் படம் வைத்திருப்பவர்கள் படத்தை வைத்தும் வழிபடலாம். சித்திரகுப்தர் படத்தை வீட்டில் வைக்கலாமா என்றால்! தாராளமாக வைக்கலாம். இவரை வணங்குபவர்களுக்கு நரகம் செல்லாமல் இருப்பதற்கான வழிகளை இவரை காண்பிப்பார் என்பதால் சித்தரகுப்த வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

kalasam

ஒரு பொழுது சாப்பிட்டு உபவாசம் இருந்து, கலசத்தில் எழுந்தருளி இருக்கும் சித்ரகுப்தருக்கு சித்திரன்னம் எனபபடும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற கலவை உணவுகளை தயார் செய்து படைக்க வேண்டும். உப்பு, தயிர், பசும்பால் இந்த மூன்று பொருட்களையும் அன்றைய நாளில் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற நியதியும் உண்டு. ஆகவே இந்த மூன்று பொருட்களை தவிர்த்து உணவு எடுத்துக் கொள்வது நல்லது. நிவேதன பொருட்களுக்கு இவை தடையல்ல! நீங்கள் சாப்பிடும் உணவில் இந்த மூன்று பொருட்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். இரவில் இவற்றை குடும்பத்துடன் சேர்ந்து நிலவொளியில் அமர்ந்து சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.