இன்று இந்த சுலோகத்தை எப்போது துதித்தாலும் அற்புதமான பலன்கள் உண்டு

chitra-pournami

சூரிய பகவான் 12 ராசிகளில் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் தான் சித்திரை மாதம் ஆகும். இந்த சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் சூரியனும், சந்திரனும் சேர்ந்து உயிர்கள் அனைத்தின் மீது அருள் மழையைப் பொழியும் ஒரு அற்புத தினம் தான் சித்ரா பௌர்ணமி தினம். சித்ரா பௌர்ணமி தினம் ஆன்மீக ஆற்றல் அதிகம் நிறைந்த ஒரு தினமாகும். அந்நாளில்நாம் இறைவனை முழுமனதோடு தியானித்து வேண்டுவதால் நாம் விரும்பிய பலன்களை பெறலாம். அதற்காக உதவும் சித்ரா பௌர்ணமி ஸ்லோகம் இதோ.

chitra pournami sivan

சித்ரா பௌர்ணமி ஸ்லோகம்

ஓம் கமலவர்ணனே போற்றி
ஓம் சித்திரை உருவே போற்றி
ஓம் பயம் போக்குபவனே போற்றி
ஓம் கால உருவே போற்றி

ஓம் அந்தக நண்பனே போற்றி
ஓம் ஞான உருவே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கணக்கனே போற்றி

chandra bagavan

ஓம் தர்மராஜனே போற்றி
ஓம் தேவலோக வாசனே போற்றி
ஓம் ஆயுள் காரணனே போற்றி
ஓம் மேன்மை தருபவனே போற்றி

- Advertisement -

ஓம் குழந்தை வடிவினனே போற்றி
ஓம் குளிகன் உருவினனே போற்றி
ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி
ஓம் சித்திரகுப்தனே போற்றி

chitra pournami

சித்ரா பௌர்ணமி தினத்தன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரையான காலத்தில் மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், அன்பான வாழ்க்கை துணை, நன்மக்கள் செல்வம், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள்.

money

வருடத்தில் மற்ற எந்த மாதங்களில் வரும் பவுர்ணமி தினங்களிலும் சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி தினம். ஆன்மீக ஆற்றல் மிகுந்த ஒரு தினமாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் தெய்வங்களுக்கான விரதங்கள் இருப்பதும் இறைவழிபாடு மற்றும் தான தர்மங்கள் செய்வதும் சாலச் சிறந்ததாகும். இந்த சித்திரை பௌர்ணமி தினத்தன்று மேற்கூறிய ஸ்லோகத்தை துதித்து வழிபடுவதாலேயே ஒருவர் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:
வீண் கவலைகள், தீர வெளிநாடு செல்ல மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chitra pournami slokam in Tamil. It is also called as Chitra pournami mantra in Tamil or Chitra pournami stotram in Tamil or Chitra pournami thuthi in Tamil.