முட்டை சேர்க்காமல் சுவையான சாக்லேட் ரவா கேக்கை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்

cake
- Advertisement -

முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது, மேலும் குழந்தைகளின் பிறந்த நாளன்று கடைகளில் கேக் வாங்குவதற்கு பதிலாக நாமே செய்யும் பொழுது  அது கூடுதல் சுவையும், சந்தோஷத்தையும் தரும்.  சுவையான சாக்லேட் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம் அதுவும் மைதாவில் செய்யாமல், முட்டை சேர்க்காமல், மிகவும் ஆரோக்கியமான முறையில் செய்யலாம். கேக் என்றாலே பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். அதிலும் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும், ஆனால் இதனை கடையில் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஒரு முறை செய்து கொடுங்கள். இனிமேல் கடையில் வாங்குவது என்பதையே தவிர்த்து விடுவீர்கள். வாருங்கள் இந்த சுவையான சாக்லேட் ரவா கேக்கை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர் –  1/4 கப், சர்க்கரை –  1/2 கப், சமையல் எண்ணெய் –  1/4 கப், ரவை –  1 கப், கொக்கோ பவுடர் –  1/4  கப், பால் –  1/2 கப், மைதா – 3 ஸ்பூன், பேக்கிங் பவுடர் –  1 ஸ்பூன், பேக்கிங் சோடா –  1/4 ஸ்பூன், சாக்லேட்  ஸ்பிரட்  –  தேவையான அளவு, ஸ்ப்ரிங்கில்ஸ் –  தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கால் கப் கெட்டியான தயிர்,  அரை கப்  சர்க்கரை,  கால் கப்   சமையல் எண்ணெய்  ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கிக் கொள்ளவும். அதனுடன் ஒரு கப் வறுத்த ரவை மற்றும் கால் கப் கொக்கோ பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.

கால் கப் அளவு காய்ச்சி ஆற வைத்த பால் மற்றும் 3 மேஜைக்கரண்டி மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும். அனைத்தையும் நன்கு கலந்து 30 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு கேக் மாவு கெட்டியாக இருப்பதை பார்க்கலாம். ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு சூடாக்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கால் கப் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு  கேக்  பாத்திரம் அல்லது டப்பாவில்  சிறிதளவு வெண்ணெய் தடவி அதன் மீது பட்டர் பேப்பர் போட்டுக் கொள்ளவும். அல்லது மைதா மாவு தூவி கொள்ளவும். இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள சாக்லெட்  ரவா கேக் மாவை அதில் ஊற்றவும்.

கேக் மாவு அதனுள் வைத்து குறைவான தீயில் 50 முதல் 60 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்வெந்த பின்னர் ஒரு குச்சி வைத்து  குத்தி பார்க்கவும், மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயார்.அதன் மீது சாக்லெட்டை தடவிக் கொள்ளவும். நீங்கள் விருப்பபட்டால் மேலே  ஸ்ப்ரிங்கில்ஸ் தூவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்சுவையான முட்டை சேர்க்காத சாக்லேட் கேக் தயாராகிவிடும்.

- Advertisement -